-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின்
செயற்பாடுகளை விஷ்த்தரிக்கும் நோக்கில் அக்கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளர்
சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.றஸ்ஸாக் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல்
சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் 2017-07-30 ஆம் திகதி
இடம்பெற்றது.
நீண்டகாலமாக கட்சியுடனேயே இணைந்திருக்கும் கட்சி
முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட குறித்த கலந்துரையாடலில் எதிர்காலத்தில் கட்சியின்
செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு எதிர்வரும் 2017-08-07 ஆம் திகதி கிராம
சேவகர் பிரிவு மட்டத்திலிருந்து கட்சியின் உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி அவர்களது
கருத்துக்களையும் பெற்று முழுவீச்சில் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மத்தியில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சி
இருக்கின்றபோதிலும் காலங்காலமாக அக்காட்சியிலேயே இணைந்திருக்கும் கட்சிக்காரர்கள்
இரண்டாம்தர உறுப்பினர்களைப்போல் நடத்தப்படுவது தொடர்பில் உறுப்பினர்களால் இங்கு
கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கட்சி தொண்டர்களை தக்கவைப்பது என்றால் இனியாவது
அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கியே உயர்மட்டங்கள் தீர்மானங்களை எடுக்கவேண்டும்
என்றும் அதற்கான அழுத்தங்களை புதிதாக நியமனம் பெற்றுள்ள அமைப்பாளர் பிரயோகிக்க
வேண்டும் என்றும் கட்சியின் செயற்பாடுகளை தைரியத்துடன் முன்னெடுப்பதற்கு முன்னாள்
அமைச்சர் மன்சூர் பிரதிநிதித்துவப்படுத்திய கல்முனைக்கு அரசியல் அந்தஸ்த்து ஒன்றை
வழங்கி மறைந்த மன்சூர் அவர்களையும் கல்முனை ஐக்கிய தேசியக்கட்சி தொண்டர்களையும்
கட்சி கௌரவப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர்
கபீர் ஹாஸிமுடைய இணைப்புச்செயலாளரும் மாவன்னல முஸ்லிம் சம்மேளன தலைவருமான
ஏ.ஆர்.எம்.றிஸ்வி சுபைர் மற்றும் நிலஅளவையாளர் மீராசாஹிப் அப்துல் றபீக், முஸ்லிம்
சமய அமைச்சரின் இணைப்பாளர் அஸ்வான் மௌலானா உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment