Wednesday, July 26, 2017

ஏ.ஆர். மன்சூர் உயிருடன் இருந்த போது கட்சியால் மதிக்கப்படவில்லை

2000.09.12 ஆம் திகதிசெவ்வாய்க்கிழமை

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்அஷ்ரப்அவர்கள்  கொழும்பு மாநகர முன்னாள் மேயர் முஸம்மில்அக்கரைப்பற்றைச் சேர்ந்தபொறியியலாளர் நஸீர்ஆகியோர்களோடு முன்னாள் வர்த்தகவாணிபத்துறை அமைச்சர்.ஆர்.மன்சூர் அவர்களின் கொழும்புவீட்டுக்குச் சென்று மன்சூர்அவர்களையும் அவரதுகுடும்பத்தினரையும் சந்தித்தார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களும் முன்னாள்அமைச்சர் மன்சூர் அவர்களும் ஒருவரைஒருவர் கட்டிப்பிடித்து அன்பைவெளிப்படுத்திக் கொள்கின்றார்கள்.
அதன் பின்னர் மர்ஹும் அஷ்ரப்அவர்கள் முன்னாள் அமைச்சர் மன்சூர்அவர்களைப் பார்த்து “காக்கா (நானாஉங்களின் அரசியல் கொள்கைதான்முற்றிலும் சரிஎல்லாஇனத்தவர்களையும் அனைத்துச்செல்கின்ற உங்களின் செயல்பாடுதான்தற்போது நாட்டிற்குத் தேவைஅதனைநான் தற்போது உணர்ந்துவிட்டேன்அதன் நிமிர்த்தம் நான் தற்போது தேசியஐக்கிய முன்னணி (NUA) எனும் கட்சியைஆரம்பித்துள்ளேன்எங்களோடுநீங்களும் உங்கள் மகன் றஹ்மத்மன்சூரும் இணைந்து கொள்ளவேண்டும்கட்சிக்காக நீங்கள் எதுவும்செய்ய வேண்டிய அவசியமில்லைஎங்களோடு நீங்கள் இருந்தால் அதுவேபோதும்உங்களுக்கு செய்யப்பட்டஅநியாயத்துக்கு எப்பாடு பட்டாவதுஉங்களை ஒரு பிரதிநிதியாகபாராளுமன்றம் அனுப்பி அதன் மூலம்நான் சந்தோஷப்படுவேன்”. என்றுகூறுகின்றார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களின்வேண்டுகோளை மன்சூர் அவர்கள்  ஏற்றுக்கொள்கின்றார்.
இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டுநாட்கள் கடந்த பின்னர்
2000.09.14 ஆம் திகதி வியாழக்கிழமைபாராளுமன்றத்தில். . . . . . .

அன்று குழுக்களின் பிரதித் தலைவர்,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்செயலாளர் நாயகம் இன்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்கள்,
கெளரவ பிரதி சபாநாயகர் அவர்களேஇன்னும் மகிழ்ச்சியான ஒரு விடயத்தைபேசிவிட்டு எனது உரையைமுடித்துக்கொள்கின்றேன்எமது தேசியஐக்கிய முன்னணியில் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் அமைச்சர் .ஆர்மன்சூர் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார் என்ற  நற்செய்தியைஇந்த சபைக்கு அறிவிக்கவிரும்புகின்றேன்.பாராளுமன்ற  ஹன்ஸாட் 2000.09.14  பக்கம் 363

இவர் பாராளுமன்றத்தில் பேசியஇரண்டு நாட்களின் பின்னர்
2000.09.16 ஆம் திகதி சனிக்கிழமைகாலை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர்  எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானார். ( இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிஊன் )
மர்ஹும் அஷ்ரப் அவர்களின் அகாலமரணத்தின் பின்னர்கட்சியில்முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள்எந்த வகையில் மதிக்கப்பட்டுள்ளார்அவருக்கு கட்சியில் உரிய இடம்வழங்கப்பட்டதாகுறைந்தது அவரின்அரசியல் அனுபவங்களையாவதுகட்சியின் உயர்பீடம் பெற்றுக்கொள்வதற்கு முற்சித்ததும் உண்டாமர்ஹும் அஷ்ரபினால் அன்பாககட்சியில் இணைக்கப்பட்டு உரிய இடம்வழங்குவதற்கு திட்டமிடப்பட்டவரும்தற்போதய தலைவர் ரவூப் ஹக்கீம்அவர்களால் இவரின் கட்சி இணைவைபாராளுமன்றத்தில் பெருமையாகபேசப்பட்டவருமான முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் .ஆர்மன்சூர் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் சரியான முறையில் மதிக்கப்படாமல் கறிவேப்பிலையாகவே பாவிக்கப்பட்டார் என்பதே உண்மை.


மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின்இறுதிக்கால ஆசைப்படி முன்னாள்அமைச்சர் .ஆர்மன்சூர் அவர்கள் உயிருடன் இருந்த போது  கட்சியால் சரியாக அன்னார் மதிக்கப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அவருக்குஉரிய இடம் வழங்கப்படவில்லை.அவருடைய தமிழ் முஸ்லிம் உறவுக்கானசேவைத் திறனுடைய அனுவங்களையும்பெற்றுக்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...