Friday, July 14, 2017

அர‌சிய‌ல‌மைப்பில் என்ன‌ அம்ச‌ங்க‌ள் அமைய‌ப்போகின்ற‌ன‌ என்ப‌தாவ‌து ஹ‌க்கீமுக்கு தெரியுமா

ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் ந‌ல்லாட்சி அர‌சாங்க‌ம் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு கிட‌த்த‌ட்ட‌ மூன்று வ‌ருட‌ங்க‌ளாகியும் புதிய‌ அர‌சிய‌ல் யாப்பு இப்ப‌டித்தான் அமையும் என்ற‌ ந‌க‌ல் திட்ட‌மாவ‌து அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கு வ‌ழ‌ங்காத‌ நிலையில் நாட்டின் நிர‌ந்த‌ர‌மான‌ நிம்ம‌திக்காக‌ தாமும் கூட்ட‌மைப்பும் இணைந்து புதிய‌ அர‌சிய‌ல் யாப்பை அமைக்க‌ப்போகிறோம் என‌ அமைச்ச‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் கூறுவ‌து வெறும‌னே ம‌க்க‌ளை ஏமாற்றி கால‌த்தை க‌ட‌த்தும் செய‌லாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

புதிய‌ அர‌சிய‌ல் யாப்பு எனும் மாயை மான் என்ற‌ த‌லைப்பில் க‌ட்சித்த‌லைம‌ய‌க‌த்தில் ந‌டைபெற்ற‌ க‌ல‌ந்துரையாட‌லின் போது உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி இவ்வாறு தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்ததாவ‌து

ந‌ல்லாட்சி அர‌சு ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ புதிதில் புதிய‌ அர‌சிய‌ல் யாப்பை இல‌குவாக‌ ஏற்ப‌டுத்தியிருக்க‌ முடியும். அந்த‌ நேர‌த்தில் சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் ம‌வுன‌மாக‌ இருந்த‌ன‌ர். அத்துட‌ன் ந‌ல்லாட்சி என்ப‌து எப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆட்சியாக‌ இருக்கும் என்ப‌து தெரியாத‌ மாயை மான் என்ற‌ நிலையில் ஏதோ நாட்டில் நிம்ம‌தியான‌, நீதியான‌ நிலையை தோற்றுவிக்க‌ப்போகிற‌து என்ற‌ எதிர் பார்ப்பும் அனைத்து ம‌க்க‌ளிட‌மும் இருந்த‌து. அந்த‌ நேர‌த்தில் புதிய‌ அர‌சிய‌ல‌மைப்பை முன் வைத்து பாராளும‌ன்ற‌த்தில் வென்றிருக்க‌ முடியும்.

ஆனால் ந‌ல்லாட்சி அர‌சு சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு பாத‌க‌மான‌ புதிய‌ தேர்த‌ல் முறையை கொண்டு வ‌ருவ‌த‌ற்கே முன்னுரிமை அளித்த‌துட‌ன் அத‌னை அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ நிறைவேற்றிய‌த‌ன் மூல‌ம் ர‌ணில் அர‌சு சிங்க‌ள‌ இன‌வாதிக‌ளை திருப்திப்ப‌டுத்த‌ முய‌ன்ற‌து. இத்த‌கைய‌ தேர்த‌ல் மாற்ற‌த்துக்கு முஸ்லிம் காங்கிர‌ஸ் ம‌ற்றும் ம‌னோ க‌ணேச‌ன் போன்றோரும் க‌ண்ணை மூடிக்கொண்டு ஆத‌ர‌வ‌ளித்த‌ன‌ர்.

இப்போது ந‌ல்லாட்சி அர‌சு என்ப‌து குருட‌னுக்கு யானையாக‌ காட்ட‌ப்ப‌ட்ட‌ பிசாசு என்ப‌து நாட்டு ம‌க்க‌ளுக்கு தெரிய‌ வ‌ந்துள்ள‌துட‌ன் அர‌சின் அமைச்ச‌ர்க‌ள் உத‌வியுட‌ன் இன‌வாத‌ பொது ப‌ல‌ சேனாவையும் அர‌சு ப‌ல‌ப்ப‌டுத்திய‌துட‌ன் அர‌சில் உள்ள‌வ‌ர்க‌ளே அர‌சை குற்ற‌ம் சொல்லும் நிலை ஏற்ப‌ட்ட‌ பின் அர‌சின் கையாலாகா த‌ன‌ம் தெளிவாகியுள்ள‌தால் புதிய‌ அர‌சிய‌ல் யாப்புக்கெதிராக‌ பௌத்த‌ பீட‌ங்க‌ள் குதித்துள்ள‌ன‌.

அது மட்டும‌ல்லாது புதிய‌ அர‌சிய‌ல் யாப்பின் ந‌க‌ல் பிர‌தியும் நாட்டு ம‌க்க‌ளுக்கோ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கோ கூட‌ இன்ன‌மும் வ‌ழ‌ங்க‌ப்ப‌டாத‌தால் புதிய‌ அர‌சிய‌ல் யாப்பு என்ப‌து சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு பாதிப்பு போன்றும் சிறு பான்மை ம‌க்க‌ளுக்கு மாயை மான் என்ற‌ பாரிய‌ வ‌ர‌ப்பிர‌சாத‌ம் போன்றும் போக்கு காண்பிக்க‌ப்ப‌டுகிற‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் ப‌ல‌ம‌டைய‌ வைத்த‌து த‌விர‌ எதுவும் ந‌ட‌க்க‌வில்லை.

நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளுகெதிராக‌ செய‌ற்ப‌ட்ட‌ ஒரு பௌத்த‌ ம‌த‌ த‌லைவ‌ரைக்கூட‌ கைது செய்ய‌ முடியாத‌ பிர‌த‌ம‌ர் ர‌ணிலினால் அனைத்து பௌத்த‌ ம‌த‌ பீட‌ங்க‌ளையும் எதிர்த்து ச‌க‌ல‌ இன‌ ம‌க்க‌ளுக்கும் ஏற்ற‌ புதிய‌ அர‌சிய‌ல் தீர்வை உருவாக்குவார் என‌ எவ‌னாவ‌து ந‌ம்பினால் அவ‌ன் உல‌க‌ ம‌கா ம‌டைய‌னாக‌ இருக்கும்.  முஸ்லிம் காங்கிர‌சும், த‌மிழ் கூட்ட‌மைப்பும் இத்த‌கைய‌ ம‌ட‌மையில் இருந்து கொண்டு இருவ‌ரும் இணைந்து த‌மிழ் பேசும் ம‌க்க‌ளை அடுத்த‌ தேர்த‌ல் வ‌ரை ஏமாற்ற‌ப்போகிறார்க‌ள். அடுத்த‌ தேர்த‌லில் ந‌ல்லாட்சியை ந‌ம்பி மோச‌ம் போய் விட்டோம். ஆட்சியை மாற்ற‌ ஆணை தாருங்க‌ள் என‌ வீர‌ முழ‌க்க‌ம் போட்டு சிறுபான்மை ம‌க்க‌ளை மீண்டும் உசார்  ம‌டைய‌ர்க‌ளாக்கி த‌ம‌து ப‌த‌விக‌ளை த‌க்க‌ வைத்துக்கொள்ளும் நாட‌க‌மே ந‌ட‌க்கிற‌து.

புதிய‌ அர‌சிய‌ல‌மைப்பில் என்ன‌ அம்ச‌ங்க‌ள் அமைய‌ப்போகின்ற‌ன‌ என்ப‌தாவ‌து எழுத்து மூல‌ம் ர‌வூப் ஹ‌க்கீமுக்கு தெரியுமா என‌ கேட்கிறோம். அதுவே தெரியாத‌ நிலையில் நிம்ம‌தியான‌ யாப்பு வ‌ர‌ப்போகிற‌து என்ப‌து கோமாளித்த‌ன‌மான‌ க‌ருத்தாகும்.

ஆக‌வே முஸ்லிம்க‌ளுக்கு பாதிப்பை ஏற்ப‌டுத்தி இன‌வாதிக‌ளை ப‌ல‌ப்ப‌டுத்தும் அர‌சிய‌ல் யாப்பு போன்ற‌ பேச்சுக்க‌ளை கைவிட்டு விட்டு நாட்டின் த‌ற்போதைய‌ அர‌சியல் யாப்புக்க‌மைய‌ உள்ள‌ ச‌ட்ட‌ங்க‌ளையாவ‌து ப‌ய‌ன்ப‌டுத்தி ச‌க‌ல‌ இன‌ம‌க்க‌ளுக்கும் நீதி, நியாய‌ம் கிடைக்க‌ச்செய்து இன‌வாதிக‌ள் யாராக‌ இருந்தாலும் த‌ராத‌ர‌ம் பாராது ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் அர‌சாக‌ இந்த‌ அர‌சை மாற்ற‌ முய‌ற்சி செய்யுங்க‌ள். அத‌னை விடுத்து உங்க‌ளின் சுக‌ போக‌ங்க‌ளுக்காக‌ ம‌க்க‌ளை தொட‌ர்ந்தும் ஏமாற்ற‌ வேண்டாம் என்ப‌து உல‌மா க‌ட்சியின் க‌ண்டிப்பு நிறைந்த‌ கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...