Sunday, June 25, 2017

ம‌க்காவின் பிறைச்செய்தி அந்த‌ நிமிட‌த்திலேயே ந‌ம‌க்கு கிடைத்து விடுவ‌தால் பிறை க‌ண்டாகி விட்ட‌து

1906. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்;  பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால்  அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :30

நோன்பு என்ப‌தும் பெருநாள் என்ப‌தும் பிறையை காண்ப‌தை வைத்தே தீர்மாணிக்க‌ வேண்டும் என்ப‌த‌ற்கான‌ பிர‌தான‌ ஹ‌தீத் மேலே உள்ள‌தாகும். இந்த‌ ஹ‌தீதில் ந‌பிய‌வ‌ர்க‌ள் ஒரு குறிப்பிட்ட‌ ஊர் ம‌க்க‌ளை விழித்து சொல்ல‌வில்லை. அதாவ‌து ம‌தீனாவாசிக‌ளே என்று கூட‌ விழிக்க‌வில்லை. மாறாக‌ மொத்த‌ முஸ்லிம்க‌ளையும் விழித்தே சொன்ன‌த‌ன் மூல‌ம் ந‌பிய‌வ‌ர்க‌ளின் வார்த்தை என்ப‌து எக்கால‌த்துக்கும் ஏற்ற‌து என்ப‌து நிரூப‌ண‌மாகிற‌து.
ஆக‌வே பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் விடுங்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம் முழு முஸ்லிம்க‌ளும் ஒரு நாளில் பிறை காணும் நிலை வ‌ந்தால் அதுவும் முடியும் என‌ தெரிந்து கொள்கிறோம்.
சுமார் 100 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ஒவ்வொரு கிராமமும் ஒரு உல‌க‌மாக‌ இருந்த‌து. அந்த‌ கிராம‌த்தில் காணும் பிறையை அடுத்த் ஊருக்கு அதே விநாடியில் அறிவிக்க‌ முடியாம‌ல் இருந்த‌து. அத‌னால் ஒவ்வொரு கிராம‌த்த‌வ‌ரும் த‌த்த‌ம் ஊர் பிறையை பார்த்த‌ன‌ர்.
பின்ன‌ர் வானொலி க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌ பின் பிறை என்ப‌து நாட்டுக்கு ஒரு பிறை என்றான‌து.

அதாவ‌து வானொலிக்கு முன் இல‌ங்கையில் கொழும்பு அறிவித்த‌லுக்காக‌ ஏனைய‌ ஊர்க‌ள் காத்திருக்க‌வில்லை. காத்திருந்தாலும் பிறை க‌ண்ட‌ கொழும்பு செய்தி க‌ல்முனைக்கு வ‌ருவ‌த‌ற்கு குதிரை வ‌ண்டியில் ஒரு நாளாவ‌து செல்லும்.
அப்போது முஸ்லிம்க‌ள் நாம் இது வ‌ரை கால‌மும் ந‌ம‌து ஊர்க‌ளிலேயே பிறை பார்த்து தீர்மாணித்தோம் அது எப்ப‌டி வானொலி அறிவித்த‌லை ஏற்ப‌து, அவ்வாறு ஏற்ப‌து பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் விடுங்க‌ள் என்ற‌ ஹ‌தீதுக்கு முர‌ண் அல்ல‌வா என‌ கேட்க‌வில்லை. மாறாக‌ மேற்ப‌டி ஹ‌தீத் கிராம‌த்துக்கு கிராம‌ம் ம‌ட்டும‌ல்ல‌ நாட்டுக்கு நாடு என்ப‌தையும் புரிந்து கொண்டார்க‌ள்.
அவ்வாறு முடியாது என்போர் எப்ப‌டி கிண்ணியா பிறையை முழு இல‌ங்கை ம‌க்க‌ளுக்கும் திணிக்க‌ முடியும்? கிண்ணியாவில் பிறை க‌ண்டால் கிண்ணியா ம‌க்க‌ள் ம‌ட்டும்தான் பெருநாள் எடுக்க‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கிண்ணியாவுக்கு போய் பெருநாள் கொண்டாட‌ வேண்டும். கிண்ணியா பிறையின்ப‌டி கொழும்பில், க‌ல்முனையில் பெருநாள் கொண்டாட‌லாம் என‌ யார் சொன்னார்க‌ள்.? இத‌ற்கு ஹ‌தீதில் ஆட்கார‌ம் உள்ள‌தா? இல்லை. மாறாக‌ பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் விடுங்க‌ள் என்ற‌ ஹ‌தீத் வானொலி, டெலிபோன் என்ப‌ன‌ க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌பின் பொருந்துகிற‌து என்ப‌தால் அன்றைய‌ ச‌மூக‌ம் ஒரு நாட்டில் எங்கு பிறை க‌ண்டாலும் அத‌னை ஏற்க‌லாம் என்ப‌தை உல‌மாக்க‌ள் விள‌ங்கியிருந்தார்க‌ள்.
இதே ஹ‌தீத் ஒரே நேர‌த்தில் பிறை அறிவித்த‌லை முழு உல‌கும் க‌ண்டு கொள்ளும் என்றிருந்தால் மேற்ப‌டி ஹ‌தீத் முழு உல‌க‌ முஸ்லிம்க‌ளுக்கும் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகும் என்ப‌தே இன்றைக்கும் அந்த‌ ஹ‌தீத் பொருத்த‌மான‌து என்ப‌தை ப‌ல‌ உல‌மாக்க‌ள் விள‌ங்காம‌ல் விட்டாலும் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் இன்ஷா அள்ளாஹ் விள‌ங்குவார்க‌ள்.

நாடுக‌ள், தேச‌ங்க‌ள் என்ப‌ன‌ ம‌னித‌ன் வ‌குத்துக்கொண்ட‌தாகும். இறைவ‌னை பொறுத்த‌வ‌ரை முழு உல‌கும் ஒரு தேச‌மாகும்.


*தலைப்பிறை பற்றி ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்*
--------------------------------------------------

فَمَنْ بَلَغَهُ أَنَّهُ رُئِيَ ثَبَتَ فِي حَقِّهِ مِنْ غَيْرِ تَحْدِيدٍ بِمَسَافَةٍ أَصْلًا

யார் (அவருக்கு பிறை ) காணப்பட்டு விட்டது என்று ( தகவல் ) வந்தடைகிறதோ அவர் அடிப்படையில் ( எந்தவொரு  ) பிரயாண தூரத்தையும் வரையறுக்காமல் ( அவருக்கு வந்ததை நடைமுறைப் படுத்துவது ) அவர் விடயத்தில் உறுதியாகிறது .

مجموع الفتاوى (25 / 111):
فَتَلَخَّصَ: أَنَّهُ مَنْ بَلَغَهُ رُؤْيَةُ الْهِلَالِ فِي الْوَقْتِ الَّذِي يُؤَدِّي بِتِلْكَ الرُّؤْيَةِ الصَّوْمَ أَوْ الْفِطْرَ أَوْ النُّسُكَ وَجَبَ اعْتِبَارُ ذَلِكَ بِلَا شَكٍّ وَالنُّصُوصُ وَآثَارُ السَّلَفِ تَدُلُّ عَلَى ذَلِكَ. وَمَنْ حَدَّدَ ذَلِكَ بِمَسَافَةِ قَصْرٍ أَوْ إقْلِيمٍ فَقَوْلُهُ: مُخَالِفٌ لِلْعَقْلِ وَالشَّرْعِ.

எனவே ,   நோன்பையோ அல்லது பெருநாளையோ அல்லது ( இதர ) வணக்கங்களையோ (பிறை ) பார்த்தல் மூலம் நிறைவேற்றக் கூடிய நேரத்தில் எவருக்கு பிறை பார்த்த (செய்தி ) வந்தடைகிறதோ அவர் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் அதை எடுத்துக் கொள்வது கடமையாகும் . ( சுன்னாஹ் ) ஆதாரங்களும் சலப்களின் ஆதார்களும் அதையே உணர்த்துகிறது . . யார் ஒரு குறைவான பிரயாண தூரம் என்றோ அல்லது ஒரு ஒரு மாகாணம் என்றோ ( அத்தூரத்தை ) வரையறுக்கிறாரோ  அவருடைய கூற்று சிந்தனைக்கும் மார்க்கத்திற்கும் முரணானதாகும் .

நூல் : மஜ்மூஉல் பதாவா

أَصْبَحَ صَائِمًا لِتَمَامِ الثَّلَاثِينَ مِنْ رَمَضَانَ , فَجَاءَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَإِنَّهُمَا أَهَلَّاهُ بِالْأَمْسِ , فَأَمَرَهُمْ «فَأَفْطَرُوا

“நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். நபி صلى الله عليه وسلمஅவர்கள் நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”.

(அபூமஸ்வூத் அல்அன்ஸாரி(رضي), தாரகுத்னி)

أَنَّهُمْ كَانُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ آخِرِ النَّهَارِ , فَجَاءَ رَكْبٌ فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوُا الْهِلَالَ بِالْأَمْسِ , فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ يُفْطِرُوا وَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ

“மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர்வந்து,நேற்றுநாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினர்.நபி صلى الله عليه وسلم நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுமிடத்திற்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.

(அபூஉமைர் (رضي), அபூதாவூது, அஹ்மது, தாரகுத்னி)


ஆக‌வே பிறை என்ப‌து உல‌கில் ஒரு பிறைதான். அது காண‌ப்ப‌ட்ட‌தாக‌ செய்தி உட‌ன‌டியாக‌ கிடைக்காவிடில் ஒவ்வொரு கிராம‌மும் அந்த‌ கிராம‌த்து பிறையை வைத்து பெருநாளை எடுக்க‌லாம். ஒரே நேர‌த்தில் முழு உல‌க‌மும் பிறை கண்ட‌ செய்தி கிடைத்தால் அத‌னை முழு முஸ்லிம்க‌ளும் ஏற்க‌ முடியும்.
இது விட‌ய‌த்தில் பிறை க‌ண்ட‌தாக‌ ஒரு இஸ்லாமிய‌ நாடு அறிவித்தால் அத‌னை முழு உல‌கும் ஏற்க‌ முடியும். ஆனால் அந்த‌ செய்தி ச‌ரியா பிழையா என்ப‌தை ஒவ்வொரு ம‌னித‌னும் சுய‌மாக‌ தீர்மாணிக்க‌ முடியாது என்ப‌தாலும் பிறை க‌ண்ட‌ செய்தி ந‌பிய‌வ‌ர்க‌ள் என்ற‌ த‌லைமைக்கு அறிவித்து அத்த‌லைமையின் அறிவிப்பை முஸ்லிம்க‌ள் ஏற்ற‌த‌ற்கிண‌ங்க‌ உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் ஒவ்வொரு நாளும் ப‌ல‌ த‌ட‌வை முன்னோக்கும் ம‌க்கா த‌லைமையின் பிறை அறிவித்த‌லை ஏற்ப‌தே மேலே உள்ள‌ பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் பிறை க‌ண்டு விடுங்க‌ள் என்ற‌ ஹ‌தீதை ஏற்ற‌தாக‌ முடியும்.

சில‌ர் பின் வ‌ரும் இப்னு அப்பாசின் ஹ‌தீதை காட்டுகிறார்க‌ள். இந்த‌ ஹ‌தீதின் ப‌டி பார்த்தாலும் பிறை ஷாமில் பிறை பார்த்த‌ செய்தி அதே நேர‌த்தில் கிடைக்க‌வில்லை. ப‌ல‌ நாட்க‌ள் பிந்தியே கிடைக்கிற‌து. அத‌னால் அன்றைய‌ சூழ்லில் அது பொருத்த‌மான‌தே.
அது ம‌ட்டும‌ல்ல‌ இப்னு அப்பாசின் இந்த‌ ஹ‌தீதின் ப‌டி ஒரு நாட்டுக்கு ஒரு பிறை என்ப‌தையும் ஏற்க‌ முடியாது. மாறாக‌ ஒரு ஊருக்கு ஒரு பிறை என்றே ஏற்க‌ முடியும்.
1983. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன்.
அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "முஆவியா (ரலி) அவர்கள்
கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book :13
Muslim

இப்னு அப்பாஸ் அவ‌ர்க‌ள் முழு அரேபியாவின் க‌லீபாவாக‌, த‌லைவ‌ராக‌ இருக்க‌வில்லை. ம‌தீனாவின் த‌லைவ‌ராக‌ இருந்தார்க‌ள். அத‌ன் ப‌டி அவ‌ர்க‌ள் ம‌தீனாவின் பிறையை ம‌தீனாவுக்கு ம‌ட்டுமே செய‌ற்ப‌டுத்தினார்க‌ள்.
அத‌ன் பின் வானொலி க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌ பின் முழு அரேபியாவுக்கும் ஒரு பிறை என்றான‌து.
இப்னு அப்பாசின் அந்த‌ சூழ‌லுக்கான‌ அவ‌ர‌து நிலைப்பாடு ச‌ரியான‌து. கார‌ண‌ம் பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் பிறை க‌ண்டு விடுங்கள் என்ற‌ ஹ‌தீத் அன்றைய‌ கிராம‌த்து சூழ‌லுக்கும் பொருந்தும். பின்ன‌ர் வானொலி க‌ண்ட‌ பின்ன‌ரான‌ ந‌வீன‌ உல‌குக்கும் பொருந்தும். த‌ற்போதைய‌ ச‌ட்ட‌லைட் கால‌த்துக்கும் பொருந்தும். இன்றைய‌ கால‌த்தில் ம‌க்காவின் பிறைச்செய்தி அந்த‌ நிமிட‌த்திலேயே ந‌ம‌க்கு கிடைத்து விடுவ‌தால் பிறை க‌ண்டாகி விட்ட‌து என்ற‌ செய்தியை ஏற்ப‌து முஸ்லிம்க‌ளின் க‌ட‌மையாகும். இவ்வாறு செய்யும்ப‌டியே ந‌பிய‌வ‌ர்க‌ளின் ஹ‌தீத் ந‌ம‌க்கு சொல்கிற‌து.


- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
உல‌மா க‌ட்சி

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...