Posts

Showing posts from December, 2016

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்

Image
யுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.

கார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.
அத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து.  அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.

இந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…

முஸ்லிம்க‌ள் ஒன்றிணைந்து ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை வ‌ட‌க்குக்கு அழைத்து பேச‌ வைக்க‌ வேண்டும்

பேரின‌வாதிக‌ளின் நிக‌ழ்ச்சி நிர‌லை இன்றைய‌ ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும்  க‌ன‌ க‌ச்சித‌மாக‌ கொண்டு செல்கிறார்க‌ள் என்ப‌த‌யே ஜ‌னாதிப‌தியின் வில்ப‌த்து ச‌ம்ப‌ந்த‌மான‌ அறிவித்த‌ல் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. அக்க‌ட்சி மேலும் தெரிவித்த‌தாவ‌து

90ம் ஆண்டு வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ள் அன்றைய‌ ஐ தே க‌ ஆட்சியின் போது புலிகளால் அனைத்த உறிஞ்ச‌ப்ப‌ட்டு வெளியேறிய‌ இட‌ங்க‌ள் 20 வ‌ருட‌ங்க‌ளில் காடாகிப்போன‌து என்ப‌தை நாடு அறியும். இந்த‌ நிலையில் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் மஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் சிற‌ந்த‌ வ‌ழி ந‌டாத்த‌லில் யுத்த‌ம் நிறைவு பெற்ற‌பின் தாம் வ‌ழ்ந்த‌ இட‌ங்க‌ளுக்கு மீண்ட‌ போது அவை காடாக‌ காட்சிய‌ளித்த‌ன‌. இத‌ன் கார‌ண‌மாக‌ பெசில் ராஜ‌ப‌க்ஷ‌வின் உத‌வி மூல‌ம் முஸ்லிம்க‌ள் அவ‌ற்றை துப்ப‌ர‌வு செய்து கொஞ்ச‌ப்பேர் மீள் குடியேறிய‌ போதும் அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் அற்ற‌ நிலையிலேயே வாழ்வை ஆர‌ம்பித்த‌ன‌ர்.
இந்நிலையில் முஸ்லிம்க‌ள் மீள் குடியேறுவ‌தை த‌டை செய்ய‌ வேண்டும் என்ற‌ வெளிநாட்டு ட‌ய‌ஸ்போராக்க‌ளின் வேண்டுத‌லை க‌ட‌ந்த‌ அர‌சின் அமைச்சில் இருந்த‌ ச‌ம்பிக்க‌ போன்ற‌வ‌ர்க‌ள் பொதுப‌ல‌ சே…

இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாடலாம் ! மௌலவி முபாறக்

https://www.facebook.com/srilanka.thawheeth?fref=nf


ஸ்ரீ லங்கா உலமா கட்சிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வுக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு

Image
ஸ்ரீ லங்கா உலமா கட்சிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) வுக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இதன் போது ஸ்ரீ ல தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் A.M.  ரியால், பொதுச்செயலாளர் அப்துர்ராஸிக், துணை தலைவர் பர்ஸான்,துணை செயலாளர்களான ரஸ்மின், ஹிஷாம், முயீன் ஆகியோரும் உலமா கட்சி சார்பில் அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, இணைச்செயலாளர் இஸ்ஸ்தீன் (முன்னாள் கொழும்பு மாநகர உறுப்பினர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த முனையும் முஸ்லிம்களுக்கெதிரான அரசின் சதிக்கெதிராக ஸ்ரீ த ஜமாஅத் மேற்கொண்ட ஜனநாயகரீதியிலான ஆர்ப்பாட்டங்களுக்கு உலமா கட்சித்தலைவர் தமது கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான மார்க்க ரீதியிலான அமைப்புக்கள் அனைத்தும் சமூக பிரச்சினைகளின் போது மௌனமாக இருக்கும் போது ஸ்ரீ தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அக்கறை காட்டியமை அவர்களின் சமூக அக்கறையை காட்டுகிறது எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இலங்கை அரசியலின் சம கால நிலைமை, சமூகத்தின் எதிர் காலம், தேர்தல் முறை மாற்றத்தில் …

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் - முஜீபுர் றஹ்மான்

Image
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் குறறம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர் முஸ்லிம்கள் தொடர்பாக  ஒரு   மோசமான இனவாதக் கருத்தை கருத்தை வெளியிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தைத் தகர்க்கும் இந்த மோசமான கருத்து அடங்கிய வீடியோவை ஜனாதிபதி ஊடகப்பிரிவு சகல ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தது. ஒரு சிறுபான்மை இனத்தின் மீது அபாண்டமாக வெளியிடப்பட்ட கருத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முஜீபுர் றஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
முஜீபுர் றஹ்மான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

                                                                                                                                        29.12.2016 திரு. மைத்திரிபால சிரிசேன அதிமேதகு ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு கொழும்பு 01.
அதிமேதகு  ஜனாத…

சமூகஜோதி எம்.ரீ அப்துல் கபூர் ஜே.பி - கலா பூஷண அரச விருது

Image
இலங்கை நாட்டின் கலைத்துறைக்கு உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து “கலாபூஷணம்” அரசவிருது வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவின்போது நிந்தவூர் - 13ம் பிரிவிவைச் சேர்;ந்த சமூகஜோதி எம்.ரீ அப்துல் கபூர் ஜே.பி அவர்கள் “கலா பூஷண அரச விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தேசிய ரீதியில் பல்வேறுபட்ட சமூக நல அமைப்புகளில் முக்கியஸ்தராக இருந்து செயல்பட்டுவரும் இவர் அம்பறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர் சமூக நலப் பேரவையின் ஸ்தாபகத் தலைவராகவும், சிரேஷ்டபிரஜைகள் சம்மேளத்தின் கௌரவச் செயலாளராகவும் இருந்து வருகின்றார்.
நிந்தவூர் மத்தியஸ்த சபை அ.மா. ஊடக வியலாளர் போரம், அ.மா தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை, முஸ்லிம் மீடியா போரம் (கொழுமபு) அகில இன நல்லுறவு ஒன்றியம் (ரத்தினபுரி) சிரேஷ்ட பிரஜைகளின் தேசிய ஒன்றியம் (கொழும்பு) ரத்தின தீபா பவுண்டேஷன் ஊடகம் (கண்டி) என்பனவற்றின் கௌரவ உறுப்பினராகவும் இருந்துவரும் எம்.ரீ.ஏ. கபூர் அவர்கள் சிரேஷ்ட ஊடக வியலாளரும் ஒரு சமாதான நீதவானுமாவார்.
இவரது நீண்ட கால சமூக நல சேவைகள் சமாதான முயற்சிகள் மற்றும் இன ஒற்றுமைபோடு ஊடகத…

சய்ந்தமருது ARM பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்

Image
( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

இன்று சாய்ந்தமருது பிரதேசத்திலே மிவும் பிரசித்தம் வாய்ந்த பாடசாலையான ARM பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும் மிக மிரம்மாண்டமான முறையில் சய்ந்தமருது LEE MERIDIAN HALL ல் இடம்பெற்றது.

இந்த ARM பாலர் பாடசாலையானது சுமார் 15 ஆண்டுகள் பழமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பல நுட்பங்களை கையாண்டு பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தி வருகின்றனர், இதில் இந்த வருடத்தில் சுமார் நுாற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி பயின்றனர் அதில் சுமார் 85 பிள்ளைகள் 2017 ம் ஆண்டில் முதலாம் தரத்தில் கல்வி பயில இந்த பாலர் பாடசாலை ஊடாக அனுப்பப்படும் ஒரு நிகழ்வாக இது இடம்பெற்றது

இந்நிகழ்வில் ARM பாலர் பாடசாலை மாணவர்களது உணர்வு பூர்வமான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அந்தவகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்கள் கலந்து கொண்டார்கள் அதனோடு சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்

இன்னும் ARM பாலர் பாடசாலையின் ஆசிரியர்களும் , மாணவர்களின் பெற்றோர்களும் , ம…

கல்முனைகுடி வாழ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்

( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நாடு பூராகவும் டெங்கு நுளம்பின் பாதிப்பு அதிகளவாக காணப்படுகின்ற இந்த வேளையில் கல்முனை பிரதேசத்திலும் அதிகளவானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப் பட்டு அதர்க்கான சிகிச்சைகளை பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ( 27 ) கல்முனைக்குடி பிரதேசத்தின் அனைத்து இடங்களிலும் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் ஒன்று கல்முனை மாநகர சபை மற்றும் அனைத்து விளையாட்டு கழகங்களின் சார்பாக இடம்பெற உள்ளது.
இந்த டெங்கு நுளம்பு ஒழிக்கும் செயற்திட்டத்தில் பொது மக்களாகிய நீங்கள் உங்களது வீடுகளில் உள்ள டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான 
தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்கு நுளம்புகள் முட்டையிடுகின்றன.  உதாரணமாக குறும்பை மட்டைகள், யோகட் கோப்பைகள், டயர்கள், பூச்சாடிகள், வடிகான்கள்  போன்ற மேலே குறிப்பிட்ட பொருட்களை சுத்தம் செய்து அந்த கழிவுப் பொருட்களை நாளை ( 27 ) ம் திகதி உங்கள் வீதிகளில் வரும் விசேட டெங்கு பரவும் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் வாகணத்தில் போடுமாறு வேண்டிக்கொள்ளப் படுகிரீர்கள் .
குறி…

ஒரு ஹதீத் முரண்பட்டதாக தெரிந்தால் என்ன செய்வது?

கலாநிதி றியாஸின், “இன்ரவியூ டெக்னிக்ஸ் அன்ட் ஸ்கில்” எனும் புத்தக வெளியீடு!

Image
-எம்.வை.அமீர் - பல்வேறு பயனுள்ள புத்தகங்களை வெளியிட்டுவரும் சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர், சமூக சிந்தனையாளர், கலாநிதி. எஸ்.எல்.றியாஸ் எழுதிய “InterviewTechniques and Skills” எனும் புத்தகத்தின் மீள்வெளியீடு கல்முனை ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் 2016-12-24 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எச்.எம்.நிஜாம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றசாக் அவர்களும் கௌரவ அதிதியாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரும்பங்குகொண்டிருந்தனர். இன்றைய காலத்துக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் குறித்த புத்தகத்தின் அறிமுகத்தை கிழக்குப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பி.ரி.ஏ.ஹசன் அங்கம் அங்கமாக பல்வேறு விளக்கங்களுடன் வழங்கினார். நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் தந்தை சுலைமாலெப்பை அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது கல்வியலாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு நூலைப்பெற்றுக்கொண்டனர்.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம்

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்ற பெயரில் வெளிநாட்டு சியோனிசத்தின் உதவியுடன் சில முஸ்லிம் (?) பெண் அமைப்புக்கள் இலங்கையின் திருமண சட்டத்தில் மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி வருவதை காண்கிறோம்;. இதன் ஒரு கட்டமாக அண்மைய நவமணி  பத்திரிகையில்  ப்லோரின் காசிம் மர்சூக் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் வெளி வந்துள்ளது.
பொதுவாக இலங்கை முஸ்லிம் சமூகம் தமிழ் மொழியில் பேசுகின்ற சமூகமாகும். தமிழ் மொழி தெரியாதவர்களால் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் உண்மையாக உணர்ந்து கொள்ள முடியாது என்பதை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தமிழில் வந்துள்ள மொழி பெயர்ப்புக்கு நாம் இதனை தமிழில் எழுதுவதால் மேற்படி கட்டுரை முஸ்லிம்களை வழி கெடுக்க கூடாது என்பதற்கான நன்மையை தரலாமே தவிர சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு கூட இதனை புரிந்து கொள்ள முடியும் என்பது சந்தேகமே.
முஸ்லிம் திருமண சட்டம் என்பது இலங்கை முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கும் ஒன்றாகும். இதனை நமது மூதாதையர் வெள்ளித்தட்டில் பெற்ற தரவில்லை. பாரிய பல போராட்டம், அழகிய அணகுமுறைகள் மூலமே பெற்றுத்தந்தா…

உலக அரபு மொழி தினம் கொழும்பு சாஹிராக் கல்லுாாியில்

Image
(அஷ்ரப். ஏ. சமத்)

உலக அரபு மொழி தினம் கொழும்பு சாஹிராக் கல்லுாாியில்  கபுர்  மண்டபத்தில்     நடைபெற்றது. இவ் நிகழ்வு கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக  உபவேந்தா் பேராசிரியா் எம்.எம்.எம். நஜிம் கலந்து கொண்டாாா். 
கௌரவ அதிதியாக  ஜாமியா நளீமியாவின்  சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி எச்.எல்.எம் ஹரிஸ் ஆகியோா் கலந்து கொண்டு கல்லுாாியில் மாணவா்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அரபு மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணா்வா்களுக்கு தங்கப்பதக்கம், மற்றும் விருதுகள் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.


Arabic Language Interactive Forum of the Zahira College Colombo had organized World Arabic Language Day and Prize Giving ceremony was held at the College Ghaffoor Hall recently. 
It was held under the patronage of Principal Trizviiy Marikkar. South Eastern University Vice Chancellor Prof. M.M.M. Najim was present as a chief guest and guest of honour Jamiah  Naleemiah Institute Senior Lecturer Dr. H.L.M. Haris were presented certificates and g…

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு

Image
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்
( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் சார்பாக இன்று ( 24 ) நடைபெற்ற மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இதன் போது டெங்கு நோயின் இருந்து பாதுகாக்கும் முறைகள் பற்றி பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மேலும் டெங்கு நுளம்புகள் பெருகும் குப்பைகளை காரைதீவு நகரசபை குப்பை வண்டிகள் மூலம் அகற்றப்பட்டன.
மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இவ் வேளைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய காரைதீவு நகரசபை, பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு SLTJ சாய்ந்தமருது கிளையினர்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்

இனவாதாங்களை தூண்டும் செயல்கள் -அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்

Image
சப்னி அஹமட்-  னவாதாங்களை தூண்டும் செயல்கள் முஸ்லிம் மக்கள் உள்ளபிரதேசங்களில் இடம்பெற்றாலும் மக்கள் எப்போதும் வழிப்புணர்வுகளுடன் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு முஸ்லிம், தமிழ், சிங்கள வேறுபாடுகள் இல்லாமல் நாம் ஒற்றுமையுடன் நல்ல மனப்பாங்குடன் இருக்க வேண்டும். அது போல் இலங்கை இனவாதம் அற்ற சூழலை உருவாக்க நாம் அனைவரும் முன்வரவதுடன் அதெற்கேற்றாப்போல் நமது ஒற்றுமையுடனான மனப்பாங்கினை உருவாக்க வேண்டும்  என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கம்பஹா ,மினுவான்கொட அல்-கமர் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும் நேற்று (24) மினுவான்னொட கல்லெலுவ அல்-அமான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.
நாம் ஒற்றுமையுடன் நல்லதொரு பிரதேசங்கள் இருக்கின்றோம் குறிப்பாக இவ்வாறான கல்லுவ போன்ற பிரதேசங்கங்களில் மூன்று மக்களும் சூழ்ந்து ஒற்றுமையாக வாழ்கின்றோம் அவ்வாறாக வாழ்கின்ற நாம் எமக்கெதிராக சில இனவாத ச…

தேசிய ஷூறா சபை உருவாக்கப்பட்டதில் எந்தப் பயனும் இல்லை -SLTJ

@ SLTJ  நாட்டில் உருவாக்கப் போகின்ற மாற்றங்கள் என்ன?

எங்களுடைய அடிப்படை நோக்கம் மார்க்க ரீதியாக இந்த சமூதாயத்தில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இயக்கங்களாலும் கொள்கைகளாலும் வேறுபட்டிருந்தாலும் சமூதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
ஒற்றுமை என்பது இந்த சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. ஆனால் இயக்க வேறுபாடுகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதென்பது சிரமமானது. அதேபோன்று இயக்க வேறுபாட்டில் அல்லது முரண்பாடுகளில் இருந்து கொண்டே ஒற்றுமையாக இருப்பதென்பதும் சாத்தியமான விடயம் அல்ல.
நாங்கள் அல்-குர்ஆன் ஹதீஸை மக்களுக்கு எத்திவைக்கின்ற பணியை முன்னெடுத்து வருகின்றோம். அதுதான் ஒரு முஸ்லிமின் முதன்மைப் பணியாகும். எனவே, சொல்ல வேண்டிய விடயங்களை  பக்குவமாகவும், பணிவாகவும் மக்களுக்கு எத்திவைக்க வேண்டியது எமது கடமை என்பதால் அதனை நாங்கள் செய்து வருகின்றோம். கொள்கை ரீதியாக முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த முடியுமாக இருந்தால் அது காலா காலமாக நிலைத்து நிற்கின்ற ஒற்றுமையாக இருக்கும். இது இலகுவானதொரு விடயம் அல்ல.
வெறுமனே இந்த சமூதாயம் ஒற்றுமைப்…

செங்கலடி பகுதியில் பழமைவாய்ந்த பௌத்த விகாரை அழிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

செங்கலடி பகுதியில் பழமைவாய்ந்த பௌத்த விகாரைக்கு சொந்தமான இடத்தை புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,

நான் நேற்று செங்கலடி பகுதியிலுள்ள பழமை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமொன்றுக்கு சென்றேன்.

அந்தக் காணியின் உறுதிப்பத்திரம் முஸ்லிம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்கப்பட்டு, முழுமையாக புல்டோசர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அங்கிருந்த விகாரை பாதியளவில் அழிக்கப்பட்டு தள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகவலறிந்த பொலிஸார் அங்கு சென்று காவலரண் ஒன்றை அமைத்து, அது தொல்பொருள் பிரதேசம் என பெயரிட்டுள்ளனர்.

தொல்பொருள் பிரதேசம் என பெயரிட்டால் அந்தப் பகுதிகள் பாதுகாக்கப்படும். தொல்பொருள் சிறப்பு வாய்ந்த பிரதேசங்களை பாதுகாக்கும் பணிகளிலிருந்து தொல்பொருள் திணைக்களம் விலகிச் சென்றுள்ளது என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

பேரினவாத இயக்கங்கள் அரசின் மடியில் பங்காளிகளாக.

Image
கடந்த ஆட்சியில் பொதுபல சேனாவின் காரியாலயத்தை ஹாமதுருமார்கள் அழைப்பை ஏற்று பௌத்தர் என்ற வகையில் அதனை கோத்தாபய திறந்து வைத்ததை கடுமையாக குற்றம் சாட்டிய முஸ்லிம் சமூகம் இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் நீதி அமைச்சர், பொதுபல சேனா, சிங்ஹ லே, ராவண பலய என அனைத்து இனவாத இயக்கங்களையும் தனது மடியில் வைத்துக்கொண்டு திரிவதை  முஸ்லிம் சமூகம் பாராட்டுகின்றதா? என உலமா கட்சித்தலைவர் கேள்வி எழுப்பினார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுபல சேனா நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து விட்டது என்பதே உண்மை. நீதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் அணுக்கிரகம் ஞான சார தேரருக்கு கிடைத்திருப்பதால் இனி அவர் வீதியில் இறங்கி சத்தமிட மாட்டார் என்றும் அவரும் அரசாங்கத்துடன் இருப்பதால் முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து விடயங்களும் இனி அரச அணுசரணையுடன் நடக்கும் என கடந்த வாரம் நாம் கூறியிருந்தோம். நாம் சொன்னது போன்று இப்போது அரசின் அமைச்சர் நேரடியாக பொதுபல சேனாவுக்கு உதவுவதை காண்கிறோம். அந்த வகையில் அனைத்து பேரினவாதிகளும் நீதி அமைச்சரால் அரச மரியாதையுடன் மட்டக்களப்புக்கு அழைத்துச்செல்லப்பட்டு வந்…

அடுத்த வருடம் முதல் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு பல சலுகைகள் - பைசர்

Image
எந்த அரச அதிகாரியும் முச்சக்கர வண்டி சாரதிகளையோ அல்லது உரிமையாளர்களையோ அச்சுறுத்துவதையோ அசிரத்தைக்குள்ளாக்குவதையோ நான் ஊரு போதும் விரும்பவில்லை இதனை நான் அனுமதிக்கவும் மாட்டேன் அவ்வாறு அதிகாரிகள் நடந்து கொள்ள முனையவும் கூடாது, இவ்வாறு நாதாந்த கொள்ளும் அதிகாரிகளை நான் கண்டிப்பதோடு இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் 6 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் கலந்து கொண்டதுடன், அவர்கள் எதிகொள்ளும் பல தரப்பட்ட பிரச்சசினைகள் தொடர்பாக அமைச்சரிடம் முறையிட்டனர்.
அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு உள்ள பிரச்சசினைகளை அரசியலுக்கு அப்பால் இருந்து தீர்க்க வேண்டும். எமது அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளோராட்சி மன்றங்களின் ஊடாக இதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுகிறது, நாங்கள் கதைப்பதை விட…