Sunday, September 11, 2016

வடகிழக்ககை இணைத்தது எங்கள் தாயை விற்றதற்கு சமம்.

டொனமூர் ஆணைக்குழு 1931ம் ஆண்டு ஏற்படுத்திய அரசியல் சீர்திருத்தத்தின் பின் தமிழர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது.
அதன் காரணமாக அன்று தொட்டு தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு தரவேண்டும் என்று தமிழ் தரப்பினர் போராடிவருகின்றனர்.
அதன் நிமித்தம் 1957ல் பண்டா செல்வா ஒப்பந்தம்.
1965ல் டட்லி செல்வா ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும்.சிங்கள கடும்போக்காளர்களின் அழுத்தம் காரணமாக அவ்வொப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டன.
அதன் பிற்பாடு தமிழ் தரப்பினால் பல போராட்டங்கள் முன்னடுக்கப்பட்டன.
அதேனோடு ஒட்டிய போராட்டமாக 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானமாக,தமிழ்ஈழமே எங்கள் இலக்கு என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அந்த கூட்டத்தில் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களும் இருந்தார்கள்.
அந்த கூட்டத்தில் அஸ்ரப் அவர்கள் கூறிய வார்த்தை, அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீலத்தை பெற்றுத்தறுவதற்கு நானும் பாடுபடுவேண் என்று கூறியிருந்தார்.
அதன் பிறகு தமிழ் இளைஞர்கள் இந்த அரசியல் வாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை,நாம் கலத்தில் இரங்கவேண்டும் என்று நினைத்து ஆயுதம் ஏந்தினார்கள்.
அந்த போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது.
இந்தியா ஏன் ஆதரவு அளித்தது என்றால்.
தமிழர்கள் மீது கொண்ட அன்பினால் அல்ல.
மாறாக,
அன்றய இலங்கையின் ஆட்சியை அறுதிப்பெரும்பாண்மையோடு கைப்பற்றிய யூஎன்பியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அமெரிக்க சார்வு கொள்கையை கடைப்பிடித்தது மட்டுமல்ல,
கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தில் தொலைதொடர்வு நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருநூறு வருடங்களுக்கு ஒப்பந்தம் ஒன்றும் செய்தார்.
இந்த செயல்பாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது மட்டுமல்ல,அமெரிக்காவின் இலங்கை வருகை கிழக்காசியாவில் பதட்டத்தை கொண்டுவரும் என்றும்,
இந்த செயல்பாட்டை உடனே நிறுத்த வேண்டும் என்றும்,
அன்றய இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி,இலங்கை பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்ல அமெரிக்கா சார்வு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பையும் ஜே.ஆர். பேணிவந்தார்.
இந்த மனக்கசப்பு இந்திராகாந்திக்கு ஏற்பட்டதன் காரணமாக ஜே.ஆருக்கு ஒருபடிப்புக்காட்ட வேண்டும் என்ற என்னத்தினால்தான்,
தமிழர்களுக்கு இந்தியாவில் இடமும் கொடுத்து,ஆயுதபயிற்சியும் கொடுத்து,ஆயுதமும் கொடுத்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக தமிழர்களை போராடவைத்து,
இலங்கையை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளி,இந்தியாவிடம் இலங்கை சரணடையவேண்டும் என்ற என்னத்தில்தான்,இந்தியா தமிழர்களின் போராட்டத்துக்கு உதவி அளிப்பது போல் நாடகமாடியது.
இந்த விடயத்தை தமிழர்கள் அறிந்திருந்தாலும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் நமது தனிநாட்டு கோரிக்கையை வென்றுவிடலாம் என்று நினைத்துத்தான் கலத்தில் குதித்தார்கள்.
இந்திரா காந்தியின் மறைவுக்கு பின் ராஜீப்காந்தி பிரதமரான போது,அதனை சாதகமாக நினைத்த ஜே.ஆர்.
அமெரிக்காவின் உதவியோடு,லலித் அத்துலத் முதலிக்கு பந்தோபஸ்த்து அமைச்சரை கொடுத்து, அவருடைய தலைமையில் பாரிய யுத்தம் ஒன்றை தமிழ் போராட்ட குழுக்களுக்கு எதிராக யாழ்பானத்தில் மேற்கொண்டார்.
அந்த யுத்தத்தின் காரணமாக தமிழ்குழுக்கள் பாரியபின்னடைவை சந்தித்து. யுத்தம் முடிவுக்கு வரும் நேரத்தில்,
யுத்தம் அடக்கப்பட்டால் இலங்கை நிச்சயமாக அமெரிக்காவின் பக்கம் சாய்ந்துவிடும்,இது இந்தியாவின் இறைமைக்கு பாதிப்பை கொண்டுவரும் இதனால்,இந்தியாவின் என்னம் ஈடேறும்வரை தமிழ் போராளிகள் தோற்கடிக்கப்படகூடாது என்ற என்னத்தில்தான்,
இன்னல் படும் மக்களுக்கு உணவு பொட்டலங்களை போடுவதாக கூறி,இந்திய யுத்த விமானமான மிராஜ் விமானத்தை இலங்கை நாட்டின் இறைமையை மீறி அனுப்பி ஜே.ஆருக்கு ஒரு அச்சுருத்தலை விடுத்தார், அன்றய இந்தியப் பிரதமர் ரஜீப்காந்தி.
அதோடு ஜே.ஆர் இந்தியாவிடம் சரணடைந்தார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோது அச்சுறுத்தலாக இருக்காது.
அது மட்டுமல்ல,இனிமேல் இந்தியாவின் அனுமதி இல்லாமல், எந்த பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நடவடிக்கையும் இலங்கை எடுக்காது,என்ற உத்தரவாதத்தை கொடுத்து,
இந்திய இலங்கை பனி போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.
இந்தியாவின் என்னம் நிறைவேறியதனால்,அதன்பின்
தமிழர்களுடைய தனிஈழ கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.
அதற்கு பதிலாக இணைந்த வடகிழக்கில்,பதிமூன்றாம் திருத்தத்தின் மூலம் மாகாணசபையை பெற்றுக்கொடுத்தது இந்தியா.
இந்தியாவை எதிர்த்து எதையும் சாதித்துவிட முடியாது என்று உணர்ந்த தமிழ்ஆயுத குழுக்கள் அந்த தீர்வை, கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டன.
ஆனால் தங்களுக்கு இந்த தீர்வில் பூரண திருப்தி ஏற்படவில்லை என்று கூறிய விடுதலை புலிகள்,இந்த தீர்வை நிராகரித்து மட்டுமல்ல இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராகவும் யுத்தமும் செய்தார்கள்.
இந்த நியைில் இந்தியாவுக்கு ஒரு கெட்ட பெயர் உலக அரங்கில் ஏற்பட்டது.
இந்திய படை அமைதிகாக்க சென்றதா? அல்லது
தமிழ் மக்களுடன் போர் புரிய சென்றதா?
என்று கேட்டபோது, இந்தியா கூறியது தமிழ் மக்கள் எங்களுடன் உள்ளார்கள்,
விடுதலைபுலிகள்தான் எங்கள் எதிரி என்று கூறியது, அதுமட்டுமல்ல,
மக்கள் வேறு,புலிகள் வேறு என்று காட்டுவதற்காக வடகிழக்கு தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு அன்று இந்தியா வந்தது.
அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஈபிஆர்எல்எப்,ஈஎன்டிஎல்எப் தவிர்ந்த யாருமே தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தவில்லை.
இன்னொறு கட்சி போட்டியிட்டால்தான் அது போட்டியாக அமையும் இல்லாது விட்டால் ஒருதலைபட்சமான தேர்தலாக அது கணிக்கப்படும்.
அப்படி ஒருநிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு அது ஒரு அவமானமாகவும்,புலிகளுக்கு வெற்றியாகவும் முடிந்து விடும்.
அதனால் எந்த கட்சியையாவது எதிர்த்து போட்டிஇட  வைக்கவேண்டும் என்று, அன்றய இலங்கையின் இந்திய உயர்ஸ்தானியர் "டிக்சித்" அவர்கள் பல கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ஆனால் இலங்கையில் உள்ள எந்த கட்சியும் பல காரணங்களை முன்வைத்து எதிர்த்து போட்டியிட முன்வரவில்லை.
அன்று முஸ்லிம்களுக்காக குறல் கொடுத்துக்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரசும் அதனை நிராகரித்தது.
காரணம் எங்களிடம் ஒரு வார்த்தை கூட கேக்காமல் வடகிழக்ககை இணைத்தது எங்கள் தாயை விற்றதற்கு சமம்.
இரவோடு இரவாக நாங்கள் சிறுபாண்மையிலும், சிறுபாண்மையாக ஆக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அந்த கொள்கையில் உள்ள நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டால் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும்,
அது எங்கள் உறிமையை நாங்களே விலைபேசி விற்பதற்கு சமம் என்று கூறி மறுத்துவிட்டது.
இப்படி கூறிய முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு தேர்தலுக்கு கட்டுபணம் செலுத்துவதற்கு மூன்றே நாள் இருக்கும் போது.
அவசர அவசரமாக கொழும்பிலே உள்ள நபர்களின் பெயர் பட்டியலை போட்டு தேர்தலில் போட்டியிட்டது.
அதன் பிறகு வடகிழக்கு தேர்தலில் வெற்றியடைந்த கொழும்பு வேட்பாளர்கள் ராஜினாமா செய்விக்கப்பட்டு,
வடகிழக்கில் வசிப்பவர்களை அந்த இடத்துக்கு நியமித்து அழகு பார்த்தது.
இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை அந்த கட்சியினால் கூறப்படவில்லை.
இதனால் ஏற்பட்ட நண்மை என்ன.
தீமை என்ன என்று பிற்பாடு தொடர்ந்து வரும்....
ஆக்கம்.....
எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை.....

No comments:

Post a Comment