Thursday, August 25, 2016

கோவிலுர் செல்வராஜனின் இரு நூல்களின் அறிமுகவிழா நாளை


 
நாடறிந்த கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் இருநூல்களின் அறிமுகவிழா நாளை 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் தினகரன் வாரமஞ்சரி பிரதமஆசிரியர் தே.செந்தில்வேலவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
'இல்லாமல்போன இன்பங்கள்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூலும் 'ஊருக்கு திரும்பணும்'எனும் சிறுகதைத்தொகுப்பு நூலும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது.
பிரதம அதிதியாக நாடறிந்த பிரபல திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் கலந்துசிறப்பிக்கவிருக்கின்றார் . நூல்நயவுரைகளை எழுத்தாளர் உடுவை தில்லை நடராஜா மற்றும் பவானி முகுந்தன் ஆகியோர் நிகழ்த்துவர்.
லண்டனில் வாழும் திருக்கோவிலைச்சேர்ந்த கோவிலுர் செல்வராஜன் இதுவரை 10நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார். தற்சமயம் இலங்கை வந்துள்ள அவரை தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகள் பேட்டிகண்டு கௌரவித்துவருகின்றன.
இலங்கை வானொலி இலங்கை தொலைக்காட்சி ஆகியவற்றில் முன்னர் சேவையாற்றிய கோவிலுர் செல்வராஜன் சிறந்த எழுத்தாளராவார்.

No comments:

Post a Comment