Sunday, July 10, 2016

முஸ்லிம்களின் ஒற்றுமையை சீரழிக்கும் கிழக்கின் எழுச்சி என்ற டயஸ் போராக்களின் கனவு நனவாகப்போவதில்லை! அமைச்சர் நஸீர்

Ameer Mohamed
to Ameer
47 minutes ago
Detailsமுஸ்லிம்களின் ஒற்றுமையை சீரழிக்கும் கிழக்கின் எழுச்சி என்ற டயஸ் போராக்களின் கனவு நனவாகப்போவதில்லை! அமைச்சர் நஸீர்
-எம்.வை.அமீர் -
அன்று அஷ்ரப் என்ற இளைஞனால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியினூடாக உருவாக்கப்பட்டுள்ள,ஒற்றுமையை சீரழிக்கும் நோக்குடன், டயஸ் போராக்களின் ஒத்துழைப்புடன் சிலர் முகநூல்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்,கிழக்கின் எழுச்சி என்ற டயஸ் போராக்களின் கனவு நனவாகப்போவதில்லை. என்று கிழக்குமாகாணசபையின் சுகாதார சுதேசிய வைத்திய சமூக சேவைகள் சிறுவர் நன்னடத்தை மற்றும் கிராமிய மின் வழங்கல் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இம்போர்ட் மிரரின் ஏற்பாட்டில் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதியதொப்புள்கொடியும் தலைப்பாகையும்எனும் கவிதை நூலின் அறிமுக விழா ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மத் ஹனீபா தலைமையில்,அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர்தர பாடசாலையின் கேட்போர்கூடத்தில், 2016-07-09 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அமைச்சர் நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களாலும்,தற்போதைய தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமாலும், கட்சியைவிட்டு ஓரம்கட்டப்பட்ட ஒருசிலர், இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையில் காழ்ப்புணர்வு கொண்ட டயஸ் போராக்களின் அனுசரணையுடன், அவர்களது அஜந்தாக்களுக்கு கட்டுப்பட்டு இவ்வாறான தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், முஸ்லிம்களின் துஆக்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும், அதனூடாக முஸ்லிம்கள் எழுச்சி பெற்றுள்ளதையும் எந்த கொம்பனாலும் சீரழிக்க முடியாது. என்றும் இவ்வாறானவர்கள் யார் இவர்களை யார் இயக்குகிறார்கள் என்பதை மக்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
இப்பிராந்தியத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள இச்சந்தர்ப்பத்தில் ஒற்றுமைப்பட்டுள்ள மக்களை கூறுபோடுவதனூடாக மக்களை அதன்பால் திசைதிருப்பி அபிவிருத்தி மற்றும் உரிமைகள் சார்ந்த விடயங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு தடைபோட்டு கட்சியை பலவீனப்படுத்துவதே இந்த குழுவினரின் நோக்கமாக தான் கருத்துவதாகவும் மக்கள் எப்போதும் போலியான கோஷங்களுக்கு துணைபோக மாட்டார்கள் என்று தெரிவித்த அமைச்சர், பிழையான கோசத்தை முன்வைக்கும். நபர்கள் அவர்களது பின்னணிகள் என்ன என்பதையும் தெரிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களின் தனிப்பெரும் கட்சியினை இன்னும் பலப்படுத்துவதனூடாக மட்டுமே முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் அடைவுகளை அடையமுடியும் என்று தெரிவித்த அமைச்சர், பலசந்தர்ப்பங்களில் அமைச்சர் றவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அனைவரையும் கட்சியுடன் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுபலசேன என்றும் இன்னும் பல பெயர்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தரப்புக்கள் கிளம்பியுள்ள இந்த காலநிலையை மிகுந்த அவதானத்துடன் நோக்கவேண்டியுள்ளதாகவும் எதிர்கால சந்ததிகளின் இருப்பை கவனத்தில்கொண்டு தங்களது முன்னெடுப்புகளை கொண்டுசெல்லுமாறும் டயஸ் போராக்கள் அப்போது தங்களுக்கு துணைபோக மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மற்றும் தொழில் வாய்ப்பு செயலாளர் கிழக்குமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் கலந்து கொண்டதுடன் நடுநிலை அதிதியாக கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி கைத்தொழில் போக்குவரத்து வீடமைப்பு நிர்மாணமும் சுற்றாடல்துறை போன்ற வற்றின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸும் விசேட அதிதியாக பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வும் உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இம்போர்ட் மிரரின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் வரவேற்புரையையும் பன்னூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர் அறிமுகவுரையையும் அ.ஸ.அஹமது கியாஸ் வாழ்த்துரையையும் கவிதாயினி ஜூல்பிகா, கவிஞர் பாலமுனை முபீத் போன்றோர் கவித்தூவல்களையும் வழங்கினர்.

No comments:

Post a Comment