ஹக்கீம் அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும், அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை

Image
#ஹக்கீம் #அவர்களுக்கும், சஹ்ரான் அணியினருக்கும்,  அரசியல் ரீதியான தொடர்பைத் தவிர வேறெந்த தொடர்வும் கிடையாது என்பதே உண்மை.!

சஹ்ரான் இப்படிப்பட்ட தீவிரவாதியாக மாறுவான் என்று அறிந்திருந்தால், நிச்சயமாக சத்தியமாக யாரும் அவனுடன் எந்தவித  தொடர்வும் வைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மையுமாகும்..!

தேர்தல் காலங்களில் ஏதோவொரு கட்சியை யாரும் ஆதரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த நேரங்களில் விளையாட்டு கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள், மாதர் சங்கங்கங்கள், மார்க்க விடயங்களில் ஈடுபடும் குழுக்கள் என்று பல குழுக்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவுக்காக சேர்த்துக் கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படவண்டும். அந்த வகையில் ஒரு அரசியல்கட்சியில் சேர விரும்பும் ஒரு நபரோ அல்லது ஒரு இயக்கத்தில் உள்ளவர்களையோ இவர்கள் யார் என்று ஒவ்வொருவராக ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதில்லை. அத்தோடு இவர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படபோகின்றார்கள் என்று சாஸ்த்திரமும் பார்க்க முடியாது. அரசியல் காலங்களில் ஆதரவாளர்கள் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ பிடிப்பதற்கு முயற்சிப்பார்கள். இதனை எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவும் முட…

கன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.

நான் அறிந்தவரை 1976ம் ஆண்டு அதனை பார்த்துள்ளேன். இந்தக்கப்றுகள் முஸ்லிம்களின் தொல்பொருள் சாதனமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று நான் அடிக்கடி எனது எழுத்துக்களின் குறிப்பிட்டு வந்துள்ளேன். இதனை பலரும் நக்கலாக பார்த்ததுமுண்டு.
கப்றுகளை நாம் வணங்க முடியாது என்பதற்காக அவற்றை அழித்து விட முடியாது. அதிலும் உலகில் மனிதனின் ஆரம்பத்திலிருந்து முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்த இலங்கை, இந்தியாவிலிருந்து வந்த சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன் இங்கு வாழ்ந்த எமது மூதாதையரின் அடையாளச்சின்னங்களாக அதனை நாம் பார்க்க வேண்டியள்ளது.
இப்போது இந்த 40 முழ  கப்று இராவணனின் சமாதி என தமிழ் எழுத்தாளர்கள் எழுதத்தொடங்கியுள்ளதை இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய வீரகேசரி 10.11.2013ல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பஞ்சாப்பைச்சேர்ந்த ஆய்வாளர் அசோக் காந்த். இவர் சீக்கிய ஆய்வாளர். இராமாயண சுவடுகள் பற்றிய ஆய்வு நடத்த வந்தவர். திருகோணமலைக்கும் விஜயம் செய்திருந்தார். கன்னியா வெற்றீரூற்றுப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்ட அசோக்காந்த் ஒரு விடயத்தைக்குறிப்பிட்டார். இராவணுடைய சமாதி திருகோணமலைக்குப்பக்கத்தில் ஓர் இடத்திலேயே இடம் பெற்றுள்ளது. அது கன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதியாக அடையாளம் காணப்பட்டிருக்கும் சமாதியே இராவணுடைய சமாதியாக இருக்க வேண்டும் என அவர் அடித்துக் கூறியுள்ளார்.
அது மாத்திரமின்ற கன்னியாவினுடைய மலைக்கு மேல் உள்ள 40 அடி நீளம் கொண்ட அச்சமாதி பிற்காலத்தில் தவறான வரலாறாக மாறி பெரியார் ஒருவருடைய சமாதியெனக்கூறப்பட்டிருக்கலாம். உண்மையில் அது இராவணனுடைய சமாதியென்பதுடன் அவனுக்கு அமைக்கப்பட்ட ஆலயமும் அதன் அருகில்தான் அமைந்திருக்க வேண்டுமென பல்வேறு சான்றுகளைக்காட்டி இராவணனால் தனது தாயாருக்கு ஈமக்கிரியை செய்வதற்காக உருவாக்கப்பட்ட வெந்நீர் கிணற்றுக்கு அருகிலேயே இந்த சமாதி இருக்கிறது என அடித்துக்கூறியுள்ளார் அசோக் காந்த். (வீரகேசரி 10.11.2013, பக்கம்: 7)
இதன் மூலம் அந்த சமாதி முஸ்லிம் பெரியாருடைய சமாதியாக அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அது இராவணனின் சமாதி என்றால் இராவணன் முஸ்லிமாக வாழ்ந்த ஓர் அரசன் என்ற எனது கருத்துக்கு இது வலுச்சேர்க்கிறது. இக்கருத்தை இந்த நாட்டில் நான் மட்டுமே சொல்லி வருவதால் எனது கருத்தை ஏளனமாக பலர் பார்த்தாலும் மேற்படி இந்திய ஆய்வாளரின் கருத்து எனது கருத்தை உறுதிப்படுத்தகிறது. மிக விரையில் இராவணன் ஒரு முஸ்லிம் என்பதும் உறுதிப்படுத்தப்படலாம்.
இராவணன் வேறு மதத்தை சார்ந்தவனாக இருந்திருந்தால் அந்த கப்று முஸ்லிம் பெரியாருடைய கப்று என ஆதி காலம் முதல் கருதப்பட்டிருக்குமா?
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி