Friday, August 23, 2019

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் 
யாழில் ஒரு இனிய  மகிழ்வான மாலைப்பொழுது எனும் பாராட்டுவிழா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள  பிள்ளையார் இன் ஹோட்டலில் எதிர்வரும்  10 9 2019 செவ்வாய்க்கிழமை   மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில  தலைவர் வி. சு துரைராஜா முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு இயக்கத்தின் துணைத் தலைவர் தே. செந்தில்வேலவர் தலைமை தாங்குவார்.

விழாவில் ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்தர் சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பிரதம அறங்காவலர் செஞ்சொற்செல்வர்
ஆறுதிருமுருகன் ஆகியோர் வழங்குவர்.

இந்த பாராட்டு விழா நிகழ்வில்  வாழ்த்துரைகளை உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் அகில பொதுச்செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம்,   வடபகுதி ஊடகவியலாளர் அமைப்பு மற்றும் யாழ் ஊடக மையம் ஆகியவற்றின் பிரதம ஒருங்கிணைப்பாளர் எஸ். தயாபரன்,  யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் துணை முதல்வருமான செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன்,  இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜெர்மன் நாட்டு கிளையின் தலைவர்
இ. இராஜசூரியர்,  இயக்கத்தின் இலங்கை கிளையின் தலைவர்  அ. சத்தியானந்தன்,
இயக்கத்தின் ஆஸ்திரேலியா நாட்டின் கிளை தலைவர்  ந. இ. விக்கிரமசிங்கம், 
டான் தொலைக்காட்சி சேவையின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளர்
எஸ். முகுந்தன்,
இயக்கத்தின் நோர்வே நாட்டின் தலைவர்  எஸ் . தியாகலிங்கம் 
உட்பட பலரும் வாழ்த்துரை வழங்குவார்கள்

ஏற்புரை
யை விழா நாயகன் என். வித்யாதரன் வழங்க நன்றியுரையை உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் இலங்கை கிளையின் செயலாளர்  எஸ். பிரசாந்தன் நிகழ்த்துவார்.

Tuesday, August 20, 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு - அமைச்சர் ரிஷாட்ஊடகப்பிரிவு 

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார்.
 இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.  அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது, வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான  அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன அது மாத்திரமன்றி மக்களின் நலனுக்காக சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, மற்றும் இன்னோரன்ன துறைகளில் இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கல்வி தேவைக்காக கட்டப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் பல விரைவில் திறப்பற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
வடக்கின் சுகாதார துறையை மேம்படுத்துவதற்காக  அமைச்சர் ராஜித, இந்த பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார். இதுவரை இருந்த சுகாதார அமைச்சர்களில் வடக்குக்கு ஆக கூடிய தடவை விஜயம் செய்த அமைச்சராக ராஜித விளங்குகிறார். வடக்கின் அபிவிருத்தியில் கரிசனை காட்டும் பிரதமருக்கும் அமைச்சர் ராஜிதவுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்

Monday, August 19, 2019

கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம்


திறன்மிக்க இளைஞர் சமுதாயத்தை வலுவூட்டுவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம் நேற்று  (15) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, ரஜித் கீர்த்தி தென்னகோன், இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் கண்டி மாவட்ட செயலாளர் டி.எம்.என்.ஜி.கருணாரத்ன, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன, ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா பணிப்பாளர் நாயகம் எரிக் பிரசன்ன வீரவர்தன உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Saturday, August 17, 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.

       
முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும்
- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா   தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (16)  வெள்ளிக்கிழமை மாலை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது  தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத்  தெரிவிக்கையில்,   சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும். மலேசியா, டுனூசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில், சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் எமது நாட்டில் காதி நீதிபதிகளாக வரக்கூடாது என்றும் பைஸர் முஸ்தபா இங்கு கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 தொடக்கம் 18 வயதெல்லையாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த பைஸர் முஸ்தபா, ஒரு ஆண் இரண்டாவது திருமணம் முடிப்பதாக இருந்தால் தனது சொத்துக்கள் வருமானங்களில் அரைவாசிப் பங்கை, அவர் தனது முதல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஏனைய சமூகங்களினது விவாகரத்துச் சட்டம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுவது போன்று, முஸ்லிம் காதி நீதிமன்றங்களும் அதே தரத்திற்கு உயர்த்தப்படல் வேண்டும். இதேவேளை, முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் தற்போது தடைசெய்யப்பட்டாலும், இது நிரந்தரமாகத் தடை செய்யப்படக் கூடாது.
இது முஸ்லிம்களின் உரிமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

( ஐ. ஏ. காதிர் கான்)

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.

       
முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும்
- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா   தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (16)  வெள்ளிக்கிழமை மாலை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது  தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத்  தெரிவிக்கையில்,   சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும். மலேசியா, டுனூசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில், சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் எமது நாட்டில் காதி நீதிபதிகளாக வரக்கூடாது என்றும் பைஸர் முஸ்தபா இங்கு கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 தொடக்கம் 18 வயதெல்லையாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த பைஸர் முஸ்தபா, ஒரு ஆண் இரண்டாவது திருமணம் முடிப்பதாக இருந்தால் தனது சொத்துக்கள் வருமானங்களில் அரைவாசிப் பங்கை, அவர் தனது முதல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஏனைய சமூகங்களினது விவாகரத்துச் சட்டம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுவது போன்று, முஸ்லிம் காதி நீதிமன்றங்களும் அதே தரத்திற்கு உயர்த்தப்படல் வேண்டும். இதேவேளை, முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் தற்போது தடைசெய்யப்பட்டாலும், இது நிரந்தரமாகத் தடை செய்யப்படக் கூடாது.
இது முஸ்லிம்களின் உரிமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

( ஐ. ஏ. காதிர் கான்)

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.

       
முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும்
- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா   தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (16)  வெள்ளிக்கிழமை மாலை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது  தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத்  தெரிவிக்கையில்,   சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும். மலேசியா, டுனூசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில், சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் எமது நாட்டில் காதி நீதிபதிகளாக வரக்கூடாது என்றும் பைஸர் முஸ்தபா இங்கு கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 தொடக்கம் 18 வயதெல்லையாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த பைஸர் முஸ்தபா, ஒரு ஆண் இரண்டாவது திருமணம் முடிப்பதாக இருந்தால் தனது சொத்துக்கள் வருமானங்களில் அரைவாசிப் பங்கை, அவர் தனது முதல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஏனைய சமூகங்களினது விவாகரத்துச் சட்டம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுவது போன்று, முஸ்லிம் காதி நீதிமன்றங்களும் அதே தரத்திற்கு உயர்த்தப்படல் வேண்டும். இதேவேளை, முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் தற்போது தடைசெய்யப்பட்டாலும், இது நிரந்தரமாகத் தடை செய்யப்படக் கூடாது.
இது முஸ்லிம்களின் உரிமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

( ஐ. ஏ. காதிர் கான்)

Friday, August 16, 2019

ஒப்பாரி வைக்கிறது முஸ்லிம் காங்கிர‌ஸ்.

மாகாண‌ ச‌பைத்தேர்த‌லை புதிய‌ முறையில் நட‌த்த‌ வேண்டும் என்ற‌ ஐ தே க‌வின் ஆசைக்கு காசுக்கு அடிமைப்ப‌ட்டு பாராளும‌ன்ற‌த்தில் அனும‌தித்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறது முஸ்லிம் காங்கிர‌ஸ்.


மாகாண சபைத் தேர்தல் பழைய முறைப்படியே நடத்தப்பட வேண்டும்..!

உச்ச நீதிமன்ற பொருள்கோடல் அமர்வில் மு.கா.வும் ஆஜராகும்..!

-செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவிப்பு.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோரி ஜனாதிபதி தாக்கல் செய்துள்ள பொருள்கோடல் மனு மீதான விசாரணை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் சட்டத்தரணிகள் ஆஜராகுவர் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆட்சேபனை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பொருள்கோடல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலத்தின் பிரகாரம் வகுக்கப்பட்ட எல்லை நிர்ணயம் சிறுபான்மையினருக்கு பாதிப்பானது என்பதால் மீள் எல்லை நிர்ணயம் செய்வதற்கென பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட உபகுழுவானது இன்னும் மீளமைக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல் தாமதமடைந்து செல்கிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியிருக்கிறார். அது தொடர்பிலான மனு எதிர்வரும் 23ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.

இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் சட்டத்தரணிகள் ஆஜராகி எமது தரப்பு வாதங்களை முன்வைக்கவுள்ளோம். எம்மைப்பொறுத்தவரை புதிய தேர்தல் முறையின் கீழ் வகுக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. முஸ்லிம்களுக்கு பாதகமான அந்த எல்லை நிர்ணயம் சீர்செய்யப்படாத நிலையில் புதிய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

எனினும் எல்லை நிர்ணய குளறுபடிகள் தீர்க்கப்படும் வரை பழைய விகிதாசார முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குமாயின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்முடிவுடன் இணங்கிச் செல்லும்" என்று மு.கா. செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள்சுஐப் எம். காசிம்

ஜனாதிபதி வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் மக்களுக்கிருந்த ஆர்வம் படிப்படியாகத் தணிந்து வரும் நேரமிது.ஒரு தரப்பாருக்கு சஞ்சலத்தையும் மற்றுமொரு தரப்பினருக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தி, எதிர்பார்ப்புகளின் உச்சத்திலிருந்த ஒரு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களின் ஆர்வங்கள் தணியத்தொடங்கின. கடைசியாக நடந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்றதும் ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவின் இமேஜை ஏனைய கட்சிகளை விட ஒரு படி உயர்த்தியுள்ளதுதான். எனினும் தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை, கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு இட்டுச் செல்லும். 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளே இச்சிந்தனைகளைக் கிளறுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை,செல்வாக்கு, அவருக்கிருந்த புகழ் அனைத்தையும் ஐக்கிய தேசிய முன்னணி எப்படித் தோற்கடித்தது?.தேர்தல் கூட்டணியை அமைப்பதில் ராஜபக்ஷ தரப்பு விட்ட தவறிலிருந்தே அத்தரப்பின் தோல்வியும் எழுதப்பட்டது. பலமான கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தியிருந்தால், 57 இலட்சம் வாக்குகளுடன் பங்காளிக் கட்சிகளின் பங்களிப்பும் வெற்றிக்குப் பங்களித்திருக்கும். இதே தவறுகளே இம்முறையும் இடம் பெறுமோ தெரியாது. தேசிய காங்கிரஸ், ஈபிடிபி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர இன்னும் பத்துக் கட்சிகள் இந்த அணிக்கு எத்தனை வாக்குகளுக்கு பங்களிக்கும். உண்மையில் இதர கட்சிகளின் எதிர்பார்ப்பு, இணக்கப்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தால் கோட்டாபாய வேட்பாளராகியிருக்க முடியாது. எனவே இம் முறையும் தனிநபர் ஆளுமையே களமிறங்குகிறது. ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் இந்தக் களத்தை எதிர்த்துப் போரிடப்போவது யார்? யார் என்பது இதுவரை தெரியாவிட்டாலும் களமாடப் போவது ஐக்கிய தேசியக் கட்சி என்பது மட்டும் உண்மை. இக்கட்சி தனிநபர் ஆளுமையை விடவும் கூட்டுப்பலத்தையே அதிகம் நம்பியுள்ளது.இக் கூட்டுப்பலத்தை உருவாக்கும் முயற்சிகள் இது வரை வெற்றியளிக்கவில்லை.பங்காளிக் கட்சிகள் காட்டும் தயக்கம்,ஶ்ரீகொத்தாவின் உட்பூசல்கள், எதிரணி வேட்பாளருக்குப் பின்னாலுள்ள சக்திகள் இவையெல்லாம் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பெரும் தலையிடியாகியுள்ளன.சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகளை வளைத்துப் பிடித்தாலும் அச்சமூக மக்களை வழி நடத்தும் ஆளுமை தமிழ்,முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ளதா?அல்லது 2015 இல் மந்தைகள் கட்டவிழ்ந்து போனதுபோல்,இம் முறையும் முஸ்லிம் சமூகம் கட்டவிழ்ந்து செல்லுமா? இவ்வாறு கட்டவிழாமல் காப்பாற்றப்போவது எது.? உண்மையில் இத்தலைமைகளின் முடிவுகளே சமூகம் கட்டவிழ்ந்து செல்வதைக் காப்பாற்றும். 2015 இல் 61 இலட்சம் மக்கள் தவறிழைத்தமைக்கு ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்திய வேட்பாளரே காரணம்.இதுபோன்ற தவறுக்கும் தெரிவுக்கும் மக்கள் ஆளாகக் கூடாதென்பதே ஶ்ரீகொத்தாவின் உயர்மட்டத் தலைவர்களின் கவலை. இதனால்தான் இதுவரைக்கும் இழுபறி.2015 ஆம் ஆண்டு விட்ட தவறினால் நாட்டின் நிர்வாகம் முற்றாகக் குலைந்து சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறைகள் முரண்பட்டமை ஜனநாயகத்துக்கு விழுந்த கீறல்களாகவே பார்க்கப்படுகிறது. ராஜபக்ஷக்களுக்கு நிகராக ஒரு தலைவரைப் பெறமுடியாவிட்டாலும் ஒரு கூட்டுப்பலத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் ரணில் காலம் கடத்துகிறார். காலம் பதிலளிக்கும் வரை பொறுமை காப்பதும் ரணிலுக்கு அத்துப்படியான ராஜதந்திரங்களில் ஒன்று. தனக்கு வாய்ப்பை உருவாக்குவது,வராவிட்டால் யாரையாவது மாட்டிவிடுவது. இது வரைக்கும் இந்த வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை. இம்முறை எப்படியாவது வாய்ப்புக்காக வாதாடுவதென்று விடாப்பிடியாய் உள்ளதால் ஆரூடமாகச் சொல்லப்படும் வேட்பாளர்கள் எவரையும் ரணில் பொருட்படுத்தவும் இல்லை.நாளை மறுதினம் தீர்க்கமான தீர்மானங்கள் வெளிவரவுள்ளன. ஒருவாறு ரணிலன்றி வேறு வேட்பாளரின் பெயர் வெளியாக வேண்டுமென்பதே மொட்டு அணியினரின் விருப்பம்.வெளிநாடுகளின் தலையீடு,நெருக்குதல்கள் இல்லாதிருந்தால் 2015 இலும் வென்றிருப்போம் என்கிறார் மஹிந்த. வெளிநாடுகளுக்குத் தேவையற்றவர் என்ற விம்பம் சஜித் பிரேமதாசவுக்கு கிடைப்பதற்கு  மஹிந்தவின் இந்த வாக்குமூலமே வாய்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு சஜித்தால் களமாட முடியுமா? என்பதே ஸ்ரீகொத்தாவுக்குள்ள கவலை.முன்னாள் ஜனாதிபதிகளின்  மகனும் சகோதரனும் களமிறங்கச் சாத்தியமான இந்தத் தேர்தல் நாட்டின் அதியுச்ச அதிகாரத்தை இருபது வருடங்களுக்கு கையகப்படுத்தும் போட்டியாகவே பரிணமிக்கப் போகிறது. பிரேமதாசாவை நேசிப்பவர்கள் தன்னை ஆதரிக்க வேண்டுமென்று சிங்களத் தலைவர்களைக் கொன்று குவித்த புலிகளைத் தோற்கடித்த பெருமையை ஞாபகமூட்டவே மொட்டு முனையும். குடும்ப ஆதிக்கம், கொலைகாரர்களின் அதிகாரத் தொல்லையை இல்லொதொழிக்க தனக்கு வாக்களிக்கக் கோருவார் சஜித். இரு தரப்புக் கோரிக்கைகளும் நியாயமானதுதான்.வாக்களிக்கத் தூண்டுமா? விருப்பத்தை எற்படுத்துமா? எதுவாயிருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தேராண்மைவாதத்தை அங்கீகரித்து 2013 இல் காலியில் அலுவலகம் திறந்து அங்கீகாரம் வழங்கிய மொட்டு அணி வேட்பாளரின் மனநிலையை முஸ்லிம்கள் இன்னும் மறக்கவில்லை. சிவப்புத் தொப்பியணிந்த ஒரு சில மௌலவியர் மொட்டை மோப்பம் பிடிப்பதற்காக, முழு முஸ்லிம்களும் சுகந்தம் நுகர மொட்டை நாடுவார்களா? இவ்வாறு நாடுவது முஸ்லிம்களை நடுத் தெருவில் நிர்க்கதியாக்குமா? சஜித்தைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகங்களின் நாடி, நரம்புகளைப் பிடித்தறிந்து பணியாற்றும் பக்குவமும் பற்றாக்குறையாகவே உள்ளது.இவைகளே இன்று கள எதிரொலிகள்.

Wednesday, August 7, 2019

“பொலிஸ் ஆணைக்குழுவினர் பதவி விலகவேண்டும்” ஆசாத் சாலி வலியுறுத்து


கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து கல்லெறிய வேண்டாமென்று இனவாத இலத்திரனியல் ஊடகங்களை தான் எச்சரிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.
இன்று காலை (07) ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்களின் பொய்களையும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையுமே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது . வீணாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். சதொச நிறுவனத்துடன் என்னை தொடர்பு படுத்தி பொய்யான செய்திகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மொட்டுக்கட்சியினரை ஆட்சியில் கொண்டுவருவதற்காக இந்த இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை பலிக்கடவாக்கின்றனர்.
குருநாகல் பிரதி பொலீஸ் மாஅதிபர் கித்சிறிஜெயலத்தின் இடமாற்ற விடயத்தில் பொலிஸ் ஆணைக்குழு,  காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் மேற்கொண்டதிலிருந்து இந்த ஆணைக்குழுவினர்  முள்ளந்தண்டில்லாதவர்களென நிரூபித்துள்ளனர். எனவே உடனடியாக பொலிஸ் ஆணைக்குழு பதவி விலக வேண்டும். அழுத்தங்களுக்காக வேலை செய்தால் எவ்வாறு இதனை சுயாதீன ஆணைக்குழு என்றழைப்பது?
48 நாடுகளுக்கு ஆறு மாதங்கள் தங்கக்கூடிய இலவச விசா வசதியை அரசு வழங்கியுள்ளது. இவற்றில் எந்தவொரு முஸ்லிம் நாடும் இல்லை. இலங்கைக்கு கோடிக்கணக்கான நிதியுதவியை  வழங்கும் முஸ்லிம் நாடுகளுக்கு ஏன் இந்த இருட்டடிப்பு? அவர்கள் உதவி செய்வதற்காக நீங்கள் காட்டும் நன்றிக்கடனா இது? அதுரலிய ரதன தேரர், ஆனந்த சாகர தேரர் மற்றும் ராவண பலயக்கள் முஸ்லிம் நாடுகளில் இருந்து எதுவுமே வேண்டாமென கூறுவது நகைப்புக்கிடமானது.
நெலும் பொகுணவில் இன ஐக்கிய மாநாடு என்று கூறி ஆட்களை கொண்டுவந்து நிரப்பி முஸ்லிம்களையும் குர்ஆனையும் கொச்சைப்படுத்தியுள்ளார்கள். இஸ்லாமிய விரோதிகளை மேடையில் அனுமதித்து இந்த அவமானத்தை தேடித்தந்தவர்கள், உலக முஸ்லிம் லீக்  தலைவரை தரக்குறைவாக நடத்துவதற்கும் உதவி அளித்துள்ளார்கள்.
நான் பதவிக்கு பின்னால் என்றுமே ஓடியவனல்ல; பதவிதான் எங்களை தேடி வரும். எங்கள் கை  சுத்தமானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட  எங்களில் ஏதாவது குறை இருக்குமென்று தேடிக் களைத்துபோனவர். அவரால் முடியாத ஒன்றையா இவர்கள் செய்யப்பார்க்கின்றார்கள்?
நிகாப் மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தில் எழுந்தமான முடிவுகளையோ சீர்திருத்தங்களையோ செய்வதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.”  இவ்வாறு ஆசாத் சாலி தெரிவித்தார். 

முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது-முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி


பாறுக் ஷிஹான் -FAROOK SIHAN

 முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

முஸ்லீம்கள் இந்த நாட்டில் உயிர் வாழக்கூடிய சந்தர்ப்பம் இல்லாத மாபெரும் பிரச்சினை இருந்து வருகின்றது.திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என சில பெண்களும் படித்தவர்களும் முயன்று வருகின்றனர்.முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்றுவது தான் பிரச்சினையா? என்பதை கேட்க விரும்புகின்றேன்.இந்த நாட்டில் சுமார்  20 இலட்சம் முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.இதில் சிலரே திருமண சட்டத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்.ஆனால் இதுவரைக்கும் றூற்றாண்டு காலமாக  முஸ்லீம்கள் இச்சட்டத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த முஸ்லீம்  திருமண சட்டத்தை மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். 

நாம் முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற கூடாது அதில் கை வைக்க கூடாது   என்பதை நீண்ட காலமாக எமது கட்சியின் நிலைப்பாடாகவே  தெரிவித்து வருகின்றோம்.இச்சட்டத்தில் நாம் கை வைப்பதற்கு அனுமதிப்போம் ஆனால் அதை வலுவிழக்க செய்வதற்கு துணைபோவதற்கு ஆளாவோம்.1951 ஆண்டு இறுதியாக இச்சட்டம் இறுதியாக  திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் பின்னர் இச்சட்டத்தை திருத்த முற்பட்டால் பல்வேறு காரணங்களை முன்வைத்து இறுதியாக முஸ்லீம் திருமண சட்டம் தேவையா என கேட்பார்கள்.

இவையெல்லாம் இனவாதிகளின் நிகழ்ச்சி ஆகும்.இவ்வாறான இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த முஸ்லீமும் அடிபணிய வேண்டாம் என கூற விரும்புகின்றோம்.முஸ்லீம் திருமண சட்டத்தில் எவரும் குறிப்பான முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட கூடாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம்.இந்த சட்டத்தில் ஏதாவது சேர்ப்பதென்றாலோ மாற்றம் செய்வதென்றாலோ உலமாக்களுக்கு மாத்திரமே உரிமை உண்டு.உலமா சபைக்கு உரிமை உண்டு.ஆனால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட கூடாது என்பது தான் எமது நிலைப்பாடாகும்.


எனவே தான் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்காக ஸ்ரீலங்கா  பொதுஜன  பெரமுன கட்சிக்கு எமது கட்சி ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது.  எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்க கூடிய மிகப்பெரும்  சக்தியாக ஸ்ரீலங்கா  பொதுஜன  பெரமுன கட்சி உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.அது மட்டுமல்ல சிங்கள மக்களில் பெரும்பாலானோர் இக்கட்சியுடன் இணைந்துள்ளனர்.

இதனால் முஸ்லீம் சமூகமாகிய நாம் பெரும்பான்மை 4மூகத்தோடு  இணக்க அரசியலை மேற்கொள்ள வேண்டும்.இதனால் தான் எமது கட்சியும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளதை தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்.இக்கட்சியுடன் இணைகின்ற போது பல கோரிக்கைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.அதில் முஸ்லீம்களின் பாதுகாப்பு கல்முனை பிரச்சினை மௌலவி ஆசிரியர் நியமனம்   முஸ்லீம் நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கின்ற போது பெரும்பாலாக முஸ்லீம்களை நியமித்தல் தேசிய மட்ட பிரச்சினைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.

இதனை அவர்கள் பெரும்பாலும் ஏற்றுள்ளனர்.இதனை எழுத்து மூலம் எழுதி கொடுத்துள்ளோம்.முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைகளை அவர்கள் நிராகரிக்கவில்லை.அந்த அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி இணைந்துள்ளோம்.இது ஏனைய கட்சிகளுக்கு எடுத்து காட்டு.அவர்களும் இவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு இணைய வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைக்கின்றேன். என்றார்.

Tuesday, August 6, 2019

சுவிஸில் மிகச்சிறப்பாக நடைபெற்ற, "புளொட்" அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வுதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஆகியவற்றின் ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக, இன்றையதினம் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை, 4552 Derendingen. எனுமிடத்தில், "சுவிஸ் வீரமக்கள் தின" நிகழ்வு எளிமையான முறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

"சுவிஸ் வீரமக்கள் தின" நிகழ்வு சுவிஸ்ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில், பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுடன், மலரஞ்சலி, மௌனஅஞ்சலி போன்ற நிகழ்வுடன், வரவேற்பு உரையும்,சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை போன்றனவும் மிகநேர்த்தியாக நடைபெற்று, மதிய போசனத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தலைமையுரையாற்றிய, சுவிஸ்ரஞ்சன் அவர்கள் "புளொட் அமைப்பானது, வருடாவருடம் சுவிஸில் மிகப் பிரமாண்டமான முறையில் "வீரமக்கள் தினத்தை"  நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் இம்முறை வவுனியாவில் ஜூலை மாதம் நடைபெற்ற கழக மகாநாட்டை கருத்தில் கொண்டு, செப்டெம்பர் மாதமளவில் "வீரமக்கள் தினத்தை" நடத்துவதென தீர்மானித்து இருந்தோம். ஆயினும் வீரமக்கள் தினமானது, குறிப்பிட்ட ஒருமாத காலத்துக்குள் நடத்தப்பட வேண்டுமென, கழக தலைமையின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்படி நிகழ்வை உடன் நடாத்தி உள்ளோம்".

"தற்போது விடுமுறை காலம் என்பதினால் பல தோழர்கள் சுவிஸில் இல்லாத சூழ்நிலையிலும், குறுகியகால எமது அழைப்பை ஏற்றும், நாம் எதிர்பார்க்காத வகையில் மண்டபம் நிறைந்த மக்கள் வந்து உள்ளது எமக்கு மனமகிழ்வை தருகிறது, அதிலும் சுவிஸில் உள்ள கழகத் தோழர்களுடன், ஏனைய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டது அனைவரின் உணர்வையும் வெளிப்படுத்துவதாகவும், அடுத்த வருடம் வழமை போல் முன்கூட்டியே அறிவித்து, கலைநிகழ்வுடன் பிரமாண்டமாக நடத்துவோம்" எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் நிகழ்வாக, "பொதுச்சுடரினை" புளொட் அமைப்பின் மட்டுநகர் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்து, தற்போது சுவிஸில் வாழும் தோழர்.சித்தா அவர்கள் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து அமைப்புகளின் சார்பான ஈகைச்சுடர்களை ரெலோ அமைப்பின் தோழர் விமல், புலிகளின் தீவிர ஆதரவாளரான திரு.சுதர்ஷன், ஈ.பி.டி.பி அமைப்பின் தோழர்.யசி, பொது அமைப்புகளின் சார்பில் திரு.பொலிகை ஜெயா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடந்து "விடுதலைப் போராட்டத்தில் மரணித்த அனைத்துக் கழகத் தோழர்கள், அனைத்து அமைப்புகளின் போராளிகள், பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வாக" கலந்து கொண்ட அனைத்து மக்களினாலும் சுடரேற்றப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வினைத் தொடர்ந்து அனைவரினாலும் இருநிமிட மௌன அஞ்சலியுடன் உரை நிகழ்வு ஆரம்பமாகியது.

முதலாவதாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்த்தன் அவர்களின் அறிக்கையினையை, சுவிஸ்ரஞ்சன் அவர்கள் வாசித்தார். மேற்படி அறிக்கையில், "தற்போதைய நாட்டின் சூழ்நிலைகளின் யதார்த்த சூழ்நிலை குறித்தும், எதிர்கால செயல்பாடு குறித்தும், வீரமக்கள் தின நிகழ்வின் அவசியம் குறித்தும்" விரிவாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக நோர்வேயில் இருந்து "நோர்வே ராஜன்" அவர்கள் தொலைபேசி மூலம் கருத்துத் தெரிவித்து இருந்தார். அவரது கருத்தில் "அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து குறிப்பிட்ட ஏதாவது நாளொன்றை எடுத்து, அத்திகதியில் அனைவருக்குமான நினைவு தினத்தைக் கொண்டாடுவதே சிறப்பென எமது தலைவர் சித்தார்த்தர் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அனைத்து மக்களும் சிந்திக்க வேண்டுமெனவும் குறிப்பட்டதுடன், இம்முறை வீரமக்கள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், மட்டுநகர், அம்பாறை, மலையகம் என்று பல பகுதிகளையும் உள்ளடக்கி "புளொட் ஐரோப்பிய ஒன்றியம்" சார்பாக கவிதை போட்டி நிகழ்வு நடத்தியது குறித்தும் அவர்களுக்கான பரிசில்கள் குறித்தும்" விபரித்தார்.

இதனைத் தொடர்ந்து பொது அமைப்புகளின் சார்பில், கம்யூனிஸ்ட்வாதியும், பேச்சாளருமான திரு.பொலிகை ஜெயா அவர்கள் உரையாற்றுகையில் "இவ்வீரமக்கள் தின நிகழ்வை எளிமையாகவும், மிக நேர்த்தியாகவும் சிறப்பான முறையில் நடத்துவது நன்றாக உள்ளதெனவும், அதேவேளை அனைத்து அமைப்புகளும் பொதுநோக்கின் அடிப்படையில் ஒரேகுடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டுமெனவும்", பல தத்துவார்த்தக் கருத்துக்களுடன் உரையாற்றி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையை ஆரம்பித்தவர்களில் ஒருவரும், பின்னர் ஒருவருடமாக "மனிதம்" செயற்பாட்டாளராக இருந்தவரும் தற்போது சுவிஸ் நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான "சோசலிஷக் கடசியின்" சொலோத்தூண் மாநில செயற்பாட்டாளர்களில் ஒருவராக உள்ள திரு.சுதாகரன் உரையாற்றி இருந்தார்.

அவர் தனதுரையில் "தனக்கு சரியென்றுபடுவதை நேரடியாக சொல்வதினாலேயே பலரும் தன்னை விரோதியாக பார்ப்பதாகவும், அப்படிப் பார்க்கும் சிலரின் தவறான பிரச்சாரங்களே தமக்கு ஆதரவைக் கூட்டித் தந்ததாகவும், ஆரம்பத்தில் புளொட் சுவிஸ்கிளையை ஆரம்பித்த போதும், அதில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் அதில் இருந்து வெளியேறி "மனிதம்" அமைப்பை உருவாக்கிய போதிலும், அங்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் எனது கருத்தை நேரடியாக சொல்ல முடியாத சூழ்நிலையில் அதிலிருந்தும் வெளியேறினேன். 

நான் சென்ற வருடம் ரெலோவின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டேன், இன்று புளொட் அமைப்பின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். இன்று ஓரளவாது ஜனநாயக சூழ்நிலை தோன்றி இதுபோன்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இதேவேளை புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களின் அறிக்கையில் யதார்த்தமான உண்மை நிலைகளை பகிரங்கத்தில் தெரிவித்து உள்ளார் என்பதும் பாராட்டுக்குரியது" எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ரெலோ அமைப்பின் சார்பில் தோழர்.ஞானம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "தனது கடந்த கால ரெலோ,  புளொட் உறவுகள், வாழ்க்கைகள் குறித்தும் விபரித்ததுடன், யதார்த்த சூழ்நிலைகள் குறித்தும்" விபரித்தார்.

இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன், மதிய போசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது. 

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...